கலி முற்றிவிட்டது என்பதை இனி நம்பத்தான் வேண்டியிருக்கின்றது

Image may contain: 1 person, smiling

கலி முற்றிவிட்டது என்பதை இனி நம்பத்தான் வேண்டியிருக்கின்றது, இந்த புத்தகத்தினை எழுதிய எழுத்தாளனை நேரில் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும்

நமக்கு முன்பாக அவனே சிரித்துவிடுவான்

புத்தக ஆசிரியர் யோகா சித்தராம், பாபா ராம் தேவ் வகையறா போலிருக்கின்றது

இந்த புத்தகத்திற்கும் ஒரு பதிப்பகம் அதற்கு பத்திரிகையில் விளம்பரம், இந்த உலகம் அழிந்தால்தான் என்ன?


இன்று காவேரி வேண்டும் கன்னடம் ஒழிக, கர்நாடகம் மண்ணாய் போக என கோஷ்மிடுபவன் எல்லாம் இன்னும் இரண்டு நாளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கைதட்டிகொண்டிருப்பான்


காவேரி பிரச்சினையினை சட்டத்தின் மூலமே தீர்க்க முடியும் : தமிழிசை

உச்சநீதிமன்றம் கொடுத்த சட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியும் அமையுங்கள் என தமிழகம் கேட்டுகொண்டிருக்கின்றது

இதற்கு மேலும் சட்டம் மூலம் தீர்வு வேண்டுமென்றால் எப்படி?

அம்மா தமிழிசை, இங்கே இப்பொழுது என்ன பிரச்சினை என்பதே உங்களுக்கு புரியவில்லையா?

ஆக தமிழிசைக்கு கண், காது எல்லாம் வேலை செய்யவில்லை, வாய் மட்டும் வேலை செய்கின்றது என்பது புரிகின்றது

முதலில் தமிழிசை நல்ல கண், காது மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்பது நல்லது.