26ம் தேதி தாஜ்மஹாலுக்கு செல்கின்றார் யோகி ஆதித்யநாத்

26ம் தேதி தாஜ்மஹாலுக்கு செல்கின்றார் யோகி ஆதித்யநாத், 500 பேருடன் தூய்மை பணிகளை மேற்கொள்கிறார்.

இது நாடகமோ இல்லை பரிகாரமோ ஆனால் வாழ்த்தபட வேண்டிய விஷயம்

தாஜ்மகாலை தாங்கள் வெறுக்கவில்லை, மாறாக நேசிக்கின்றோம் என இக்காரியத்தில் இறங்கும் யோகிக்கு வாழ்த்துக்கள்.

இப்படி அன்றே பாபர் மசூதியிலும் நல்ல காரியத்தில் இறங்கி இருந்தால் நாட்டில் அப்பெரும் களங்கம் நிகழ்ந்திருக்காது.

எல்லா விஷயங்களுக்கும் சேர்த்து தாஜ்மகாலை நன்றாக சுத்தபடுத்துங்கள் யோகி, அதில் தாஜ்மகால் அழுக்கு மட்டுமல்ல, எல்லா துவேஷ‌ அழுக்கும் நீங்கட்டும்.

(இந்த செய்திகள் எல்லாம் நம் ஊடகங்களில் வராது, ஆம் நல்ல செய்திகளை சொல்லவே மாட்டார்கள், மாறாக சர்ச்சை செய்திகளை, கலவரம் ஏற்படுத்தும் விதமாக திரித்து எழுதுவதில் இவர்கள் வல்லவர்கள்)