சிதறல்கள்
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது போல எச்.ராசாவும், எஸ்.வீ சேகரும் கைது , சிறைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள்
இது புரியாமல் ஆளாளுக்கு பேசி ஒன்றும் ஆகபோவதில்லை. இது அதிமுக ஆட்சி என்றல்ல, திமுக என்றாலும் நிலை நிச்சயம் இதுவேதான்
ஆம், சோ ராமசாமி கிழியாய் கிழித்தபொழுதும் அவர்மேல் துரும்பினை போட கூட யோசித்த கட்சி திமுக..
இங்குள்ள சிக்கல் அப்படி…
—————————————————————————————————————————————-
கருணாஸை பிடித்து உள்ளே போட்ட அரசு ஏன் எச்.ராசாவினை பிடிக்கவில்லை என ஆளாளுக்கு கேட்கின்றார்கள்
எச்.ராசாவினை பிடித்து உள்ளே போட்டால் நம்மை சும்மாவிடுவார்களா?
ஆட்சி கலையும் அத்தோடு கருணாசுக்கு அடுத்த செல்லில் நாமெல்லாம் இருப்போம் அவ்வளவு வழக்குகள் இருகின்றது இன்னும் வரும்
வெரி டெலிகேட் பொசிஷன்..
இது என்ன சடையப்ப வள்ளலே??
“குட்கா அள்ளலே” என்றல்லவா இருக்க வேண்டும்?, ஆயினும் கம்பனுக்கு இப்படி ஒரு அவலநிலை வந்திருக்க கூடாது
பொதுதுறை வங்கிகள் இணைப்பு தவறானது, எலியும் தவளையும் எப்படி ஒரே இடத்தில் இருக்க முடியும்? : அன்புமணி ராமதாஸ்
ஆனால் தேர்தலில் மட்டும் மதவாதம்,சாதி வாதம், தலித் கட்சிகள் , கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பிரிவினைவாதிகள் எல்லாம் கூட்டணியாக இருக்கலாம், தேர்தலில் வெல்லலாம்
அந்த ஆட்சியில் அவை பங்கும் பெறலாம் என்கின்றார் லவ்பெல்
சுப்பிரமணிய சாமிக்கு இந்த திராவிட கட்சிகளை வம்புக்கு இழுப்பது என்பது மிக விருப்பமான பொழுது போக்கு, மறுபடியும் வம்பிழுக்கின்றார்
இம்முறை என்ன சொல்கின்றார், கலைஞர் சொன்னது போல ராவணன் திராவிடன் அல்ல, அவன் இலங்கையில் இருந்தாலும் திராவிடன் அல்ல. அவனுக்கு உபியில் கோவில் உண்டு என்றெல்லாம் சொல்லியிருக்கின்றார்
அத்தோடு விட்டால் எப்படி? தன் பிரயத்யோக ஸ்டைலில் கலைஞரை எப்படி சீண்டி இருக்கின்றார் என்றால் பின்வருமாறு இழுத்திருக்கின்றார்
”ராவணன் சாம வேதம் அறிந்த அறிஞர். ஆனால் ராவணனைத் தன்னைப் போல் எனத் தவறாகக் கருணாநிதி கருதிவிட்டார்”
போதாதா? ஆயிரம் அர்தங்களை சொல்லும் வம்பு இது, விஷயம் பற்றி எரிகின்றது
கலைஞர் இருந்தால் “ஆம் நான் ராவணனே எனக்கு ராமனை போல மறைந்திருந்து கொல்ல தெரியாது, பெண்ணின் மூக்கை அறுத்து ஈவ்டீசிங் செய்ய தெரியாது , பத்தினியார் கோட்டை தாண்டி செல்ல தெரியாது
சொந்த சகோதரனை அண்ணனுகு எதிராக கிளப்பிவிடும் சூது தெரியாது” என பட்டீரென்று சொல்லி இருப்பார்
ஆனால் அவர் இல்லை என்பதால் சு.சாமிக்கு பதில் சொல்ல யாருமில்லை
விஷயம் பற்றி எரிகின்றது
சுவாமி சொன்னது புதிதல்ல, ராவணன் பிராமணன் சிவபக்தன் என்றே ராமாயணம் சொல்கின்றது, ராமனே சத்திரியனாம்
இன்னொன்று வால்மீகி எங்கும் இலங்கை என்ற தேசத்தை சொன்னதாக தெரியவில்லை, அது இலங்கை என சொன்னவன் கம்பன்
அந்த பாவத்திற்கு கம்பனை இன்று குட்கா ஊழல் விஜயபாஸ்கர் எல்லாம் விழா எடுத்து கொண்டாடுகின்றார் என்ற தண்டனை எல்லாம் உண்டு, இதனை விட என்ன கொடுமை கம்பனுக்கு வேண்டும்
ராமன் ஆரியனுமல்ல, ராவணன் திராவிடனுமல்ல இதெல்லாம் இடையில் வந்த திரிபுகள் என்பதில் சந்தேகமில்லை
எனினும் சு.சாமி வம்பிழுத்தாகிவிட்டதால் உடன்பிறப்புக்கள் எப்படி எல்லாம் சீறுவார்கள் என்பது இனிதான் தெரியும்
இந்திய கபடி அணி ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் எல்லாம் வென்றிருகின்றது, இன்னும் பல சாதனைகளை புரிந்திருக்கின்றது
ஆயினும் அந்த மாபெரும் கபடி வீரனுக்கு ஏன் வாய்ப்பில்லை என்றால் அதுதான் தமிழின வெறுப்பு, தமிழின துரோகம்
இந்த மாபெரும் தமிழ்கபடி வீரனை, தமிழனாக இருந்த சிவந்தி ஆதித்தன் கூட கண்டுகொள்ளவில்லை என்பதுதான் தமிழகத்தின் சோகமான வரலாறு
யார் அந்த கபடி வீரன்?, கபடியினை வேடிக்கை பார்த்தே கற்று, தன் அறிமுக ஆட்டத்திலே அனைவரையும் அவுட்டாக்கி,அப்படியே அம்பையரையும் பிடித்து கோட்டுக்கு வெளியே வீசிய அந்த மாபெரும் தமிழ்கபடி வீரன் யார்?
நம் அங்கிள் சைமன், யார் சொன்னார் என்றால் அவரேதான்
. என்ன சொன்னார்? தன் கபடி பெருமைகளை சொன்னார்
இவர் கல்லூரியில் படித்தபொழுது கபடி வேடிக்கை பார்த்தாராம், யாரோ வரவில்லையாம் இவரை ஆட சொன்னார்களாம் அங்கிள் கலக்கிவிட்டாராம், உடனே நிரந்தரமாக்கிவிட்டார்களாம்
இது “வெண்ணிலா கபடி குழு” படத்தை பார்த்து அன்னார் புளுகுவது என்பது எல்லோருக்கும் தெரியும்
ஆனாலும் அங்கிளுக்கு கொஞ்சம் அறிவு கம்மி என்பதால் வழக்கம் போல் மாட்டிகொண்டார்
எப்படி?
இவர் கபடி விளையாடியபொழுது எல்லோரும் “சீமான், சீமான்” என உற்சாகபடுத்தினார்களாம்
அப்பொழுது அன்னார் பெயர் சைமன், அவர் சீமான் ஆவார் என்பது அவருக்கே தெரியாது, ஆனாலும் சுற்றி இருந்தவர்களுக்கு தெரிந்து ” சீமான் சீமான்” என கத்தினார்களாம்
இப்படி கல்லூரியில் தன்னை சீமான் என அழைத்தார்கள் எனும் பொய்யினை சொல்லி கபடி கப்சாவிலும் பிடிபட்டு அவுட் ஆகின்றார் அங்கிள் சைமன்…
முன்பொரு காலம் ரஷ்யா விண்வெளி போட்டியில் முன்னணியில் இருந்தது
பொறுக்காத அமெரிக்கா நிலவினை உடைத்து தன் பலத்தை காட்ட நினைப்பதாக கதைகள், பரபரப்புக்கள் எல்லாம் வந்தன
அமெரிக்கா நிலாவினை இரண்டாக பிளக்க போவதாக எல்லாம் அன்றைய பரபரப்புகள் இருந்திருக்கின்றன
அதெல்லாம் நடக்கவில்லை, ஆனால் இன்று நடக்கும் நிலவு இம்சைகளுக்கு அதெல்லாம் நடந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் போல…
ஆதாரம் கிடைத்தால் ஹெச் .ராஜா கைது செய்யப்படுவார் : ஓபிஎஸ்
( ஒபிஎஸ்க்கு காதும் செவிடு கண்ணும் குருடு என்பதால் ஆதாரம் கிடைத்தும் ஒன்றும் ஆகபோவதில்லை..)
ஆதாரம் கிடைத்தால் கைதுசெய்யபடும் ராசா, இவர்களுக்கு ஆதாயம் கிடைத்தால் வெளிவரபோகின்றார், அவ்வளவுதான்
திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல, ஆனால் இந்துக்களின் சடங்குகளையோ இல்லை பண்டிகைகளயோ ஆதரிக்கவே மாட்டோம் எனபது போல் விளக்கி இருக்கின்றார் முக ஸ்டாலின்
இதில் அண்ணா, கலைஞர் என வசமாக வசனங்களை காட்டுகின்றாரே அன்றி பெரியாரை மிக வசதியாக மறந்தும்விட்டார் என்பது வேறுகதை
நிச்சயம் இன்னும் இந்து எதிர்ப்பு என்பது திமுகவிற்கு கைகொடுக்காது, சுத்தமாக கொடுக்காது
இது மாறிவிட்ட காலங்கள், ஆனானபட்ட கம்யூனிசமே பல மாற்றம் கண்டுதான் சீனாவினை உச்சத்தில் வைத்திருக்கின்றது
காலத்திற்கு ஏற்ப மாறா எதுவும் நிலைக்காது,
இந்து பண்டிகைகளுக்கு தன் ஊடகத்தில் சிறப்பு நிகழ்ச்சியும், வெறும் விடுமுறை தினம் என சொல்லி நகர்வதும், இந்து புராணங்களை தங்கள் டிவிக்களில் காசாக்கிவிட்டு அதன் பின் நாங்கள் இந்து எதிரி அல்ல, ஆனால் இந்து கொள்கைகளில் நம்பிக்கை இல்லை என்பது சரியல்ல
நிச்சயம் இதெல்லாம் திமுகவிற்கு பலத்த பின்னடைவினைவே கொண்டு வரும், ஸ்டாலின் ஒன்றும் கலைஞர் அல்ல
ஸ்டாலின் ஒரு மாதிரி செல்கின்றார் என்றால் சுற்றி இருப்பவர்கள் அதை சுட்டிகாட்ட வேண்டும் ஆனால் செய்யமாட்டார்கள்
ஒரு திரிகடுகம் பாடல் உண்டு, இந்நிலையில் அது திமுகவிற்கு மிக பொருந்தும்
“வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்
செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும், – இம் மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா”
என்ன பொருள்?
“உள்ளன் என்னும் பறவை வாளை என்னும் மீனைப் பிடிக்க முயற்சிப்பதும், திறமையில்லாதவன் உயர்ந்த குடியில் பிறத்தலும், அவனை சுற்றி இருக்கும் அஞ்சும் இயல்புடைய கற்றாரின் கல்வியும் ஊமை கண்ட கனாவைப் போல யாருக்கும் பயன்படாதது ஆகும்..”
ஆக திமுக அப்படி யாருக்கும் பயன்படா நிலையினை நோக்கி செல்கின்றது
உதயநிதி என் மகன், அவர் நான் இருக்கும் திமுகவினை விட்டு எங்கு செல்வார்? : முக ஸ்டாலின்
மிஸ்டர் ஸ்டாலின், அழகிரியும் இதனைத்தான் சொல்கின்றார். திமுக அவர் தந்தை கட்சி அவர் அங்கு வராமல் எங்கு செல்வார்?
அவரை ஏன் தடுக்கின்றீர்கள்?