உலக அளவில் அது அணல் வீசுகின்றது

ஒரு விஷயத்தை நீங்கள் பார்த்துவிட்டு கடந்திருப்பீர்கள், இங்கு பெட்டி செய்தியாக வந்திருக்கும் ஆனால் உலக அளவில் அது அணல் வீசுகின்றது

அதாவது அமெரிக்க விமானம் ஆற்றில் விழுந்தது ஆனால் பயணிகள் எல்லோரும் காப்பாற்றபட்டனர் என விஷயம் செய்தியாக முடிந்திருக்கலாம்

ஆனால் விவகாரம் சர்ச்சையானது, ஆம் சர்வதேச ஊடகங்கள் விஷயத்தை கிண்டுகின்றது அமெரிக்கா நெளிகின்றது

அதாவது கியூபா அருகே குமாண்டனாமோ எனும் தீவு உள்ளது, அதில் அமெரிக்க கியூப ஒப்பந்தபடி அமெரிக்கா பலத்த சிறையினை கட்டி இருக்கின்றது

கியூபாவும் அமெரிக்காவும் மிகபெரும் எதிரி தேசங்கள் ஆனால் இந்த சிறையும் அந்த ஒப்பந்தமும் எப்படி சாத்தியம்?

அதுதான் சர்வதேச அரசியல், பல காரணங்களுக்காக குறிப்பாக போதை பொருள் கும்பல் அப்பக்கம் வராமல் இருக்க அமெரிக்கா போன்ற ஒரு சக்தியின் நடமாட்டம் கியூபாவுக்கும் தேவைபட்டது

அமெரிக்காவுக்கும் பல கணக்குகள் இருந்தன‌

இந்த அல்கய்தாவின் கொடிய தீவிரவாதி முதல் ஐ.எஸ் வரை அங்குதான் அடைக்கபட்டிருக்கின்றார்கள், வெள்ளையன் கால அந்தமான் சிறையினை விட கொடிய சிறை இது

ஏகபட்ட சித்திரவதைகளும் அலறல்களும் இன்னபிற கொடிய விஷயங்களும் உண்டு, ஆனால் யாருக்கு விஷயம் தெரியும்?

உள்நாட்டில் மனித உரிமைசட்ட சிக்கல், பாதுகாப்பு உட்பட பல காரணங்களுக்காக அமெரிக்கா இத்தீவில் சிறை நடத்த்துகின்றது

இந்த தீவில் இருந்துதான் அதிகாரி மற்றும் கைதிகளுடன் அமெரிக்கா வந்திருக்கின்றது அந்த விமானம் ஆனால் காற்றின் கடும் வேகம் காரணமாக ஆற்றுக்குள் சென்றாயிற்று

விஷயம் சொல்வது இதுதான்

இதிலிருக்கும் அனைவருக்கும் இமிகிரேஷன் செக் கிடையாது, அதாவது அந்த குவாண்டமோ தீவுக்கு சென்று வருவது அமெரிக்க குடியுரிமைக்கு அப்பாற்பட்ட ராணுவ மற்றும் சி.ஐ.ஏ நடவடிக்கை

யாரை கொண்டுவருகின்றார்கள், யாரை கொண்டு செல்கின்றார்கள், எந்த நாட்டுக்காரனை எல்லாம் அங்கு அடைத்து வைத்திருக்கின்றார்கள் என யாருக்கும் தெரியாது

அதாவது அமெரிக்க குடியுரிமை கண்களில் மண்ணை தூவி வெளிநாட்டு குடிமக்களை தீவிரவாதிகளை அமெரிக்காவுக்கு கொண்டு சென்று என்னவோ செய்கின்றது அமெரிக்காவின் மர்ம டிபார்ட்மென்ட்

அட அந்த விமானத்தை பாருங்கள், பயணிகள் விமானமான மியாமி நிறுவணத்துடையது

ஆக ராணுவ பயன்பாட்டுக்காக வெளியுலகை ஏமாற்றி ஒரு பயணிகள் விமானத்தை பயன்படுத்தி விசாரணை கைதிகளை ஏற்றி குடிவரவு துறையினை ஏமாற்றியிருக்கின்றது அமெரிக்க புலனாய்வு குழு

இந்த ஆற்றில் விழுந்த விமானத்தில் ஒரு சாதாரண பயணி கூட இல்லை, பூரா வில்லங்கமான கோஷ்டி

விவகாரம் மெல்ல கசிகின்றது, சில விஷயங்கள் மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை, சட்டத்திற்கு அப்பாற்பட்டு செய்தாலும் நாட்டு நலனுக்காகவே செய்வோம் என முணுமுணுத்தபடி விஷயத்தை கடக்கின்றது அமெரிக்க மேலிடம்

விஷயத்தினை மோப்பம் பிடித்த வெளிநாடுகள் இதை வைத்து ஏதும் செய்யலமா என திட்டமிடுகின்றன‌

ஆனால் அவர்கள் திட்டமெலாம் சாத்தியமானதாக தெரியவில்லை, அமெரிக்காவின் பெரும் பலம் முன் இப்போதைக்கு எதுவும் செல்லுபடியாகாது.