அந்நாட்டில் நதிகள் கிடையாது, பெரும் விவசாய நிலங்கள் கிடையாது ஆனால் துறைமுகங்கள் உண்டு
இந்த சூயஸ்கால்வாய், வாஸ்கோடகாமாவின் சாகச பயணத்துக்கு முன்பு ஐரோப்பிய கப்பல்கள் மத்திய தரைகடலின் அப்பக்கம் நிற்கும் இந்திய சீன கப்பல்கள் செங்கடல் அல்லது ஜெட்டா பக்கம் நிற்கும்
தரைவழியாக சரக்குகள் அங்குமிங்கும் செல்லும்
அங்கிருந்து குதிரை, வான்கோழி என பல வந்தாலும் குதிரை தனி இடம் பிடித்தது, அவை அரபு குதிரைகள் அல்ல மாறாக ஐரோப்பாவில் வளர்க்கபட்டு அரேபிய சந்தைக்கு வந்து இந்தியா வரும் அரபு வழி குதிரைகள்
இங்கிருந்து சந்தணம், மிளகு, அரிசி என பல செல்லும்
இப்படி வியாபார சந்தையாக இருந்த பாலைவனம் அது, கிணறுகளும் எப்பொழுதாவது பெய்யும் மழையும் அவர்களுக்கு உணவளித்தன
இந்த வியாபார பூமியில்தான் அடிக்கடி கொள்ளைகளும் இன குழு மோதலும் நடந்தது, அடிக்கடி மோதினார்கள், பின் முகமது நபி வந்து அவர்களை ஒரே சக்தியாக்கினார்
கலீப்பாக்களின் ஆட்சிக்கு பின் ஆளாளுக்கு ஆண்டாலும் போப்பாண்டவரும் ஐரோப்பிய வியாபாரிகளும் வியாபார நோக்கில் நடந்த சிலுவைபோர்கள் அந்த பகுதி அமைதியினை குலைத்தன
பின்பு ஆட்டோமன் துருக்கியர் அப்பகுதிகளை தங்கள் பகுதியாக வைத்திருந்தனர்
பின் சிறு சிறு சுல்தான்கள் பக்கம் வந்தது, நிறைய சுல்தான்கள் இருந்தனர்
இப்போதைய மன்னரின் கொள்ளுதாத்தா சவூது என்பவர் மெக்கா மதீனா உள்ளிட்ட எல்லா சுல்தான்களையும் அடக்கி இது சவுதி அரேபியா என்றார், அத்தோடு உலக நிலவரங்கள் மாறின
1940களில் எண்ணெய் அங்கு கண்டறியபட்டது, அது அதன் தலைவிதியினை மாற்றியது
இன்று உலகின் இரண்டாம் மிகபெரிய எண்ணெய் உற்பத்திநாடு சவுதி
எண்ணெயினை விடுங்கள், அதைவிட மகா அற்புதமான இடங்கள் புண்ணிய ஸ்தலங்கள் எல்லாம் அங்கு உண்டு
பைபிளின் பழைய ஏற்பாடு காட்சிகள் எல்லாம் அங்குதான் நடந்தேறின, யூதர் 40 வருடம் அலைந்த வனாந்திரம், மன்னா பொழியபட்ட இடம், தங்க கன்றுகுட்டி செய்து இதோ கடவுள் என அவர்கள் அழிச்சாட்டியம் செய்ய மோசே மனம் வெறுத்த இடம், கற்பாறையில் கடவுள் கொடுத்த தண்ணீர் என எல்லா அடையாளங்களும் அங்குதான் உண்டு
ஆபிரகாமும் சாராவும் வாழ்ந்த் பூமி , ஜம்ஜம் எனும் நீருற்று கொடுத்து இஸ்மாயிலை கடவுள் காத்த பூமி, அந்த நீரூற்று இன்றும் உண்டு
ஏன் பத்துகட்டளை எனும் யூத கிறிஸ்தவ அடிபப்டை கொள்கைகள் வழங்கபட்ட மலையும் கல்லும் அங்குதான் உண்டு
ஆம் அந்த மலைகளின் உச்சியில்தான் கடவுள் வந்தார், மோசேக்கு அவ்விஷயங்களை கொடுத்தார்
மோசே கடவுளின் மகனாக உலாவிய இடங்கள் அங்கேதான் இருக்கின்றது
கிறிஸ்தவ யூத புண்ணிய பூமிக்கும் அதுவே தாய்வீடு
யூத இஸ்லாமிய சச்சரவு இன்னும் இதை எல்லோருக்கும் திறந்துவிட்டால் ஐரோப்பிய கிறிஸ்தவர் அழிச்சாட்டியம் சும்மாவே அட்டகாசம் செய்யும் யூதர் இன்னும் ஆடுவர் என அந்த இடங்களை வேலிபோட்டு வைத்திருகின்றது சவுதி
செங்கடல் பிளந்து மக்கள் கரையேறியதும் அங்குதான்
இஸ்லாமியரின் இதயமும் உயிரும் அங்குதான் இருக்கின்றது, நபிபெருமானின் பூமி அது, தன் மிகபெரும் வரலாற்றினை அவர் அங்குதான் பதிவு செய்தார்
மெக்கா மதீனா என இஸ்லாமியரின் இரு கண்களான மசூதிகள் அங்குதான் உண்டு
நிச்சயம் மகா புண்ணியமும் அற்புதமும் கொண்ட நாடு சந்த பள்ளிவாசல்களின் ராஜ்ஜியம்
இஸ்லாமியருக்கு அது மகா புண்ணிய பூமி என்பதில் சந்தேகமில்லை என்றாலும் யூதருக்கும் கிறிஸ்தவருக்கும் தொடர்பான இடங்களும் அங்கு உண்டு
அந்த புண்ணிய நாடு, ஆசீர்வாதங்களை நிரம்ப பெற்ற நாடு, ஒரு சொட்டு நீர் இல்லை என்றாலும் மறைமுகமாக கடவுள் தன் ஆசீர்வாதத்தை அள்ளிதெளித்து ஆளும் நாடு சவுதி அரேபியா
எதுவுமே இல்லா இடத்தில் கடவுளால் எல்லாம் முடியும் எல்லா ஆசீகளையும் கொடுக்கமுடியும் என்பதற்கு உலகின் ஒரே எடுத்துகாட்டு சவுதி அரேபியா..
கடவுளின் அருளுக்கு சான்று அத்தேசம்..
நிச்சயம் அது ஆசிபெற்ற புண்ணிய பூமி அதில் துளியும் சந்தேகமில்லை, உலகின் ஆக பழமையும் நவீன புதுமையும் கலந்து நிற்கும் நாடு அது. ஆச்சரியத்தின் தேசம்
அந்த சவுதி இன்று தன் தேசிய தினத்தை கொண்டாடுகின்றது
அம்மக்கள் கண்ணியமிக்க இறைவனை வணங்கும் வேளையில் நாட்டின் அமைதிக்கும் நிலைதன்மைக்கும் பெரும் சவால் எடுத்த சவூது மன்னர் பரம்பரையினையும் மனமார நினைகின்றார்கள்
ஈராக் போல நாசமாகமலும், ஈரான் போல சர்ச்சையில் சிக்காமலும் அந்நாடு ஓரளவு அமைதியாக வாழ்வாங்கு வாழ அந்த மன்னரும் அவர் பரம்பரையுமே காரணம்
தேசிய தினம் கொண்டாடும் சவுதி மக்களுக்கு வாழ்த்துக்கள்




லட்சகணக்கான இந்தியர்களுக்கு சோறு போடும் பூமி என்பதால் இந்தியர்கள் அவர்களின் கொண்டாட்டத்திலும் மகிழ்விலும் பங்குகொள்ள வேண்டும், வாழ்த்த்க்களை தெரிவிக்க வேண்டும்
வல்ல இறைவன் மென்மேலும் அவர்களை ஆசீர்வதிக்கட்டும், பல மதங்களுக்கு புண்ணிய பூமியான அந்த தாய்பூமி வாழ்வாங்கு வாழட்டும்