ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அங்கி தாரணை/ குறள் : 01

“அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில்

விண்ணோர்க்கு வேந்தனு மாம்”

இவ்வரி “அண்ணாக்கு தன்னை அடைந்து அங்கு அமிந்தம் உண்ணில் விண்ணோர்க்கு வேந்தனுமாம்” என பிரிந்து பொருள் வரும்மானிட உடல் ஆச்சரியத்தின் மேடை, சுரப்பிகளின் கூடை. எவ்வளவோ வகையான சுரப்பிகள் ஒவ்வொரு திரவத்தை சுரந்துகொண்டே இருக்கின்றன‌

அது வியர்வை முதல் எச்சில் வரை இன்னும் ஹார்மோன்கள் முதல் சுக்கிலம் விந்து என ஏராளம்அழுதால் கண்ணீர் சுரக்கும், உணவுகளை கண்டால் எச்சில் சுரக்கும் இன்னும் ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு திரவம் சுரக்கும் உடலில் யோகநிலையின் உச்சத்தில் அன்னாக்கு எனும் உள்நாக்கு பகுதியில் ஒரு திரவம் சுரக்கும்,
அதனை அமிர்தம் என்பார்கள் யோகிகள்

ஞானப்பால் என்பதும் இன்னும் பல வகைகளில் குறித்து சொல்லபடும் திரவமும் அதுதான்இந்த பாற்கடலை கடைந்ததால் அமிர்தம் வந்தது என்பது கூட யோகநிலையில் வரும் இந்த திரவத்தை குறிப்பதேமுதுகெலும்பை நேரே வைத்து மூலாதார அக்னியினை மூச்சுகாற்றால் எழுப்புவதுதான் பாற்கடல் கடையும் தத்துவமாயிற்று

தவம் இருக்கும் பொழுது கெட்ட சிந்தனை முதலி எழும் அது மானிடனை ஆட்டுவிக்கும் அந்த சிந்தனைகளை இறைவனிடம் சமர்பிக்கவேண்டும் இறைசக்தி அதை அகற்றும் என்பதுதான் சிவன் விஷம் அருந்திய காட்சி என்பார்கள்

சில யோகிகள்அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பதால் எல்லா புராண கதைகளின் சாயல் உடலிலும் உண்டு

அந்த யோகத்தின் உச்சியில் துரியநிலை சக்கரத்தின் துலங்கலில் சில துளி அமிர்தம் ஊறும், அதை உண்டால் தேவர்களுக்கு அரசனான இந்திரனை போல சக்தி பெறலாம் எனபதே பாடலின் பொருள்