அமெரிக்க தொழில்முனைவோரின் சிந்தனைகள் எப்பொழுதும் வித்தியாசமானவை, இப்பொழுது அதை பூனைகுரிய உணவில் கலந்துவிட்டார்கள்

இதுவரை பூனைகளுக்குரிய உணவில் மீன் மற்றும் இதர மாமிச வகைகள் இருந்தன, ஏதோ ஒரு தொழில்முனைவோர் பூனையினை கடும் ஆராய்ச்சி செய்ததில் பளீர் என பல்பு எரிந்திருக்கின்றது

ஆம், எலிகறி உணவு பூனைக்கு பிடிக்கும் என்பதை கண்டறிந்து இப்பொழுது எலி உணவு அமெரிக்காவில் பூனைகளுக்கு படுஜோராக விற்பனையாகின்றது

வியாபார மூளை என்றால் இதுதான், பூனைக்கு எலிபிடிக்கும் என்பது எல்லோரும் அறிந்தது ஆனால் இப்படி யாரும் சிந்தித்ததில்லை

இனி என்னென்ன வளர்ப்பு பிராணிகளுக்கு என்னென்ன தயாரிக்கபோகின்றார்களோ தெரியாது, அதுவும் சீனர்கள் இந்த துறைக்கு வந்துவிட்டால் அவ்வளவுதான்