தமிழக ஊடகங்கள் வழக்கம் போல் தங்கள் முட்டாள்தனத்தை காட்டி கொண்டிருக்கின்றன, அதாவது தமிழக அரசை ஆதரித்து காமெடி செய்யவில்லை மாறாக உலகளாவிய காமெடி ஒன்றை செய்ய தொடங்கியிருக்கின்றன
அதாவது மோடி ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸை சந்தித்தார் என செய்திகள் வெளியிடுகின்றன இது உலகளாவிய நாடுகளின் பதவிகளில் அவர்களுக்கு ஒரு தெளிவில்லை என்பதை காட்டுகின்றது
ஜெர்மனில் பிரதமர், அதிபர் பதவிகள் அதாவது பிரைம் மினிஸ்டர், பிரசிடென்ட் போன்ற ஆட்சிமுறை கிடையாது, சான்ஸ்லர் எனும் பதவி உண்டு
அதற்கு ஆட்சியாளர் அல்லது அதிகாரமிக்கவர் என பொருள்
ஆக பாரத பிரதமர் ஜெர்மன் சான்ஸ்லரை சந்தித்தார் என சொல்லாமல் அங்கு இல்லா பதவியான பிரதமரை சந்தித்தார் என்கின்றன தமிழக ஊடகங்கள்
இப்படி குழப்பமும் பொய்யும் பரப்பும் ஊடகங்களுக்கு தமிழக அரசின் சிறப்பு கவனிப்பும், முன்கள பணியாளர்கள் என சிறப்பு அந்தஸ்துகளும் செய்யபடுகின்றன
தமிழக அரசின் கவுரத்தை காப்பாற்றவாவது ஊடகங்கள் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளலாம்
அடிக்கடி பிரதமர் மோடியினை விமர்சித்து தமிழக ஊடகங்களுக்கு உலக நாட்டு தலைவர்களெல்லாம் ஆட்சியாளர்களாகவே தெரிகின்றார்கள் பரிதாபம்