மோடியின் ஜெர்மன் பயணம் பெரும் வெற்றியாக முடிந்துள்ளது
ஜெர்மன் உலக தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்தும் நாடு, அதன் வீச்சும் அது செய்திருக்கும் முதலீடும் பல நாடுகளில் உண்டு முக்கியமாக சீனாவில் உண்டு
இப்பொழுது ரஷ்யாவுக்கு நேரடியாகவும் சீனாவுக்கு மறைமுகமாகவும் அடிவிழும் காலம்
ஜெர்மன் இந்நேரம் சீனாவில் இருந்து ஒதுங்க நினைக்கின்றது அல்லது ரஷ்யாவுக்கு விழுவது போல் அடுத்த அடி சீனாவுக்கு எந்நேரமும் விழலாம் அது தனக்கு ஆபத்து என சிந்திக்கின்றது
ஒரு வலுவான மாற்று சக்தியாக அதாவது சீனாவுக்கு மாற்றாக இந்தியாவினை அந்நாடு அடையாளம் காண்கின்றது, மோடியின் ஜெர்மன் பயணம் அதை உறுதி செய்கின்றது
உண்மையில் 1947ல் இருந்து உலக நாடுகளுக்கு இந்தியாதான் முதல் தேர்வு சீனா அவ்வளவு பிடித்த நாடு அல்ல
ஆனால் நேருவின் குழப்பமான கொள்கை நிலமையினை சிக்கலாக்கியது, இந்திரா சோவியத் பக்கம் சரிய சீனா சுதாரித்தது
சீனாவின் மாவோ படுகில்லாடி, அவன் 1970களிலே சோவியத் பொருளாதாரம் தடுமாறுவதையும் மிக விரைவில் அது பணமின்றி உடையும் என்பதை கணித்திருந்தான்
அவன் உடனே சோவியத் ஆதரவில் இருந்து விலகி அமெரிக்க பக்கம் சாய்ந்தான், இந்தியாவின் ரஷ்ய உறவு நிக்சனுக்கும் மாவோவுக்குமான உறவுக்கு அஸ்திபாரமிட்டது
அதன் பின் சீனா சீறி எழுந்து மாபெரும் வளர்ச்சியினை கண்டது
அன்றே காங்கிரஸ் அரசு சரியான நிலைபாட்டை எடுத்திருந்தால் இந்தியா இன்று பலபடி மேல் ஏறியிருக்கும்
மோடி அரசு காலத்தை சரியாக கணித்து நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்கின்றது, பிரதமர் மோடி ஜெர்மன் பயணத்தை முடித்து இப்பொழுது டென்மார்க்கில் இருக்கின்றார்
டென்மார்க் டானிஷ் என அழைக்கபடும் டச்சு வகையறா, இன்றும் கிழக்காசியாவில் இவர்களுக்கு சில பிடிகள் உண்டு என்பதால் உலக அரசியலில் அவர்களும் உண்டு
அடுத்து மோடி பிரான்சுக்கு செல்வார், ரபேல் விமானம் போல இந்தியாவுக்கு நீர்மூழ்கி தொழில்நுட்பத்தை பிரான்ஸ் தருவது, தொடர்ந்து சீனாவுக்கு எதிராக பிரான்ஸ் அமைக்கும் கூட்டணியில் இந்தியாவினை சேர்ப்பது என பல விஷயங்கள் இந்த சந்திப்பில் உறுதிசெய்யபடும்
பாரத தலைமகன் தன் ஒவ்வொரு அடியினையினையும் நாட்டுக்காக எடுத்து வைக்கின்றார், அவர் தொடங்கும் முயற்சியெல்லாம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
அண்ணாமலை இலங்கையை ஓரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கின்றார்…. அறவகுறிச்சி மக்கள் ஓரு நல்ல தலைவரை இழந்து உள்ளனர்..அரசியல் அறிவு, பொது அறிவு, தொலை நோக்கு பார்வை, அரசியல் நாகரிகம், கண்ணியமான பேச்சு, எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பேசும் திறமை, இதெல்லாம் இருக்கற இவர் உண்மையில் tதங்கத்தலைவர்…………..விரைவில் தமிழகம் இவரை தலைவனாக எற்க்கும்.