ரஷ்ய ராணுவம் பலமானதாக இருக்கலாம் ஆனால் வெளிநாட்டு உளவாளிகளின் கரம் குறிப்பாக சி.ஐ.ஏவின் கரங்கள் அந்நாட்டு ராணுவத்தில் மிக பலமாக ஆழமாக ஊடுருவியிருப்பது தெரிகின்றது

உக்ரைனில் நடக்கும் யுத்தத்தை நேரில் கண்டு ஆலோசனை சொல்ல ரஷ்ய உச்ச தளபதி வெலரி கெலசிமோவ் அங்கு சென்றார்

போர் நடக்கும் இடம் அந்நிய தேசம் எனும்பொழுது முக்கிய தலமை தளபதி செல்வது மிக சவாலானது எனினும் ரகசிய பயணமாக அச்சவாலை வெலரி எடுத்தார்

இந்த விஷயம் உக்ரைன் தரப்புக்கு தெரியவந்திருக்கின்றது, அவர்கள் மிக சரியான தருணத்துக்கு காத்திருந்திருக்கின்றார்கள்

ரஷ்யாவின் உச்ச தளபதி முக்கிய தளபதிகள் 40 பேருடன் ஆலோசனை நடத்திவிட்டு வெளியேறிய சில நிமிடங்களில் உக்ரைனின் ஏவுகனை அந்த கட்டடத்தை தாக்கி அனைவரும் கொல்லபட்டிருக்கின்றார்கள்

உச்ச தளபதி வெலரி மயிரிழையில் உயிர்தப்பியிருக்கின்றார்

சுமார் 40 முக்கிய தளபதிகளை ஒரே நேரத்தில் இழந்த ரஷ்யா மிக மோசமான பின்னடைவினை சந்தித்து பின்வாங்குகின்றது

ரஷ்ய ராணுவத்தில் வெளிநாட்டு கரங்கள் எந்த அளவு நீண்டிருக்கின்றன என்பதை உணர்ந்திருக்கும் ரஷ்யா இனி மிகபெரிய மறு ராணுவ கட்டுமானத்தை செய்யாமல் அவர்கள் நிலைத்திருக்க சாத்தியமில்லை எனும் நிலைக்கு தள்ளபட்டிருக்கின்றது

உக்ரைனில் ரஷ்ய தோல்விக்கு காரணம் உள்ளே இருக்கும் கறுப்பாடுகள்தான் ஆனால் அந்த ஆடுகளை எப்படி அடையாளம் காண்பது என்பதில்தான் மனரீதியாக மிக சோர்ந்திருக்கின்றது ரஷ்யா

மே 9ம் தேதி ஹிட்லரை விரட்டிய நாளை ரஷ்யர்கள் கொண்டாடுவார்கள், இம்முறை புட்டீனை விரட்டிய நாளை அந்நாளில் உக்ரைனியர்கள் கொண்டாடுவார்கள் போலிருக்கிக்கின்றது