3rd May உலகின் பத்திரிகை சுதந்திர நாள்
இன்று உலகின் பத்திரிகை சுதந்திர நாள்
உலகின் மொத்த நாடுகளிலும் ஒரு நாட்டில் பத்திரிகை சுதந்திரம் மிக உச்சத்தில் இருக்கின்றது என்றால் அது இந்தியாவில்தான்
இங்கு அது மிக அதிகம்
யாரை பற்றியும் எதுவும் எழுதலாம், ஆதாரம் கிடைக்காமலே ஊழல் என கத்தலாம், யாருடைய அந்தரங்கத்தையும் உடைத்தெறியலாம்
ஒருவகையில் பார்க்க போனால் அது தேசத்தின் பலம், இந்த பத்திரிகை சுதந்திரத்தால் இந்நாட்டில் கிடைத்திருக்கும் மாற்றங்களும் உரிமைகளும் உடைக்கபட்ட மர்மங்களும் ஏராளம்
இன்னொரு வகையில் அதுவே தேசத்தின் சாபமும் கூட, நாட்டுபற்று இல்லாமல் போனதற்கும் ஏகபட்ட வீண் குழப்பங்களுக்கும் துவேஷ வெறுப்புகளுக்கும் அதுவே காரணம்
யாருக்கும் கிடைக்காத நல்ல விஷயங்கள் இந்திய பத்திரிகைக்கு கிடைத்திருக்கின்றன
சிங்கப்பூர், சீனா , அரபுநாடுகள், ரஷ்யா, இன்னும் ஏராளமான நாடுகளில் கொஞ்சமும் இல்லா உரிமை அது
அதை நல்லவிதத்தில் நாட்டுக்காகவும் நாட்டுபற்று வளரவும், தேசத்தில் அமைதியும் வளப்பமும் செழிக்கவும் இந்த பத்திரிகைகள் பயன்படுத்தட்டும்
கிட்டதட்ட இந்த முகநூலும் ஒரு பத்திரிகையின் சாயலே, இங்கும் ஏராளமான சுதந்திரம் கொடுக்கபட்டிருக்கின்றது
அந்த உரிமையினையும் நாட்டுக்காகவும் நாட்டின் வளப்பம் மற்றும் ஒற்றுமைக்காகவும் பயன்படுத்துதல் வேண்டும்
குஷ்பு சங்கத்தால் இயக்கபடும் இப்பக்கம் அதைத்தான் செய்கின்றது
நாட்டிலே மிக பொறுப்புடனும் நாட்டுபற்றுடனும் இயங்கும் ஒரே இயக்கம் இதுவே, ஒரே முகநூல் பக்கமும் இதுவே
நாட்டுபற்று மிக்க எம் தலைவி எமக்கு விதித்திருக்கும் கட்டளை அப்படியானது.