இரு மாதமாக போராடியும் உக்ரைனில் எந்த வெற்றியும் பெறாத ரஷ்யா இன்று தங்கள் வெற்றி விழாவினை கொண்டாடுகின்றது
சுமார் 78 வருடங்களுக்கு முன் இதே நாளில்தான் ஹிட்லரின் நாஜிபடைகளை ரஷ்ய செம்படைகள் வீழ்த்தி முழுவெற்றி பெற்றிருந்தன, அந்த விழா ஆண்டுதோறும் மாஸ்கோவில் பிரமாண்டமாக நடக்கும் ரஷ்ய ராணுவ வலிமையினை பறைசாற்றும் மாபெரும் ஊர்வலம் நடக்கும்
இம்முறை வரலாறு காணாத அடியினை தன் அண்டை நாடான உக்ரைனில் வாங்கியிருக்கின்றது ரஷ்யா, விமானம் கப்பல்கள் டாங்கிகள், சுமார் 15 ஆயிரம் வீரர்கள் என இழந்து மிகபெரிய இழப்பிலும் வெற்றி ஏதும் பெறாமல் அது திகைத்து நிற்கின்றது
அந்நிலையில் இன்றைய வெற்றிவிழாவும் அவர்களின் ராணுவ சாதனமும் என்ன வகையில் பார்க்கபடும் என்பது தெரியவில்லை, அந்த விழாவுக்கும் புட்டீனின் பேச்சுக்கும் உலகம் காத்திருக்கின்றது அல்லது சிரிக்க தயாராக இருக்கின்றது
இந்நேரம் ரஷ்யாவின் மிக நட்பு நாடான வடகொரியா நீர்மூழ்கியில் இருந்து ஏவும் ஏவுகனைகளை சோதித்து அதிர்ச்சி கொடுத்திருக்கின்றது, அடுத்து உலகின் கவனத்தை ஈர்க்க அது அணு ஆயுத சோதனை செய்தாலும் செய்யலாம்
ரஷ்யாவினை உக்ரைனில் அமெரிக்கா முழு கவனத்தோடு எதிர்க்கும் நேரம் ரஷ்யாவுக்கு அவசர தேவை அமெரிக்க கவனத்தை சிதறடிப்பது
இதனால் விரைவில் ஈரானோ, வடகொரியாவோ விரைவில் அணுகுண்டு சோதனை செய்யலாம் புதிய சர்ச்சையும் குழப்பமும் உருவாகலாம் பிரகாசமான வாய்ப்பு இருக்கின்றது
இவ்வளவு பெரிய ஆர்மிய வைச்சுக்கிட்டு சிறிய உக்ரைனல ஜெயிக்க முடியல இதுக்கு மாவீரன் பராக்கிரம புடின் தொங்கிறலாம்…. இதுக்கு விழா எடுக்கிறார்கள். புட்டின் இன்னும் கத்துக்க வேண்டிய பாடம் நிறைய உள்ளது.. வல்லவனுக்கு வல்லவன் நிச்சியம் உண்டு.