ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 08

“ஆதியோ டொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம்”

ஆதி என்றால் தொடக்கமும் முடிவுமான பரம்பொருள்,அழிவில்லா பரம்பொருள், இங்கு ஆதி எனபது சிவபெருமானை குறிக்கின்றது

அந்த சிவனோடு ஒன்றிடும் உணர்வினை, சிவனோடு கலந்துவிட்ட உணர்வினை, தான் வேறு இறைவன் வேறு என பிரித்துபார்க்க தெரியாமல் தன்னுள் இறைவனை உணர்ந்து நிற்கும் உன்னத நிலைதான் முறையாக (நீதியாக) செய்த தவத்தின் பலன் என்கின்றார் ஒளவையார்

நல்ல தவத்தின் பலன் இறைவனோடு கலந்த உணர்வை அடைதல் என்பது பொருள்