பஞ்சாங்களும் வானியல் சாஸ்திரங்களும் ஒருநாளும் பொய் அல்ல, அவை ஒரு காலத்தில் இந்த பூமியில் மானிடர் பெற்றிருந்த பெரும் ஞானத்தின் தொடர்ச்சிஇன்று காணும் எல்லா விஞ்ஞானமும் ஏன் இதனைவிட மிகபெரிய வளர்ச்சியும் கற்பனைக்கும் எட்டாத விஷயங்களும் அன்று சாத்தியமாக இருந்தன, மானிட இனம் பிரபஞ்சத்துடனும் அதன் இதர சக்திகளுடனும் பெரும்தொடர்பில் இருந்ததுஎதுவுமே மிதமிஞ்சி வளரும்பொழுது எல்லாருக்கும் பெரும் பல வரும்பொழுது அதர்மம் வளரும், அதர்மம் ஆடும்பொழுது அதனை பிரபஞ்சமே அழிக்கும், அப்படி அந்த பழமையான அறிவார்ந்த தலைமுறை பிரபஞ்சத்தால் ஒடுக்கபட்டதுஅந்த அறிவார்த தலைமுறை காலமே ராமாயணம், மகாபாரதம் இன்னும் புராண காலங்களாகவும் இருந்தன‌அக்காலத்தில் பூமி இருக்கும் இந்த சூரிய மண்டலமும் பால்வெளியும் ஏதோ பெரும் சக்திமிக்க மண்டலம் அருகே சஞ்சரித்திருக்கலாம் அப்பொழுது பூமியின் மானிடரை பொல இதர கிரகங்களின் உயிர்களோடு தொடர்பு ஏற்பட்டிருக்கலாம், பின் சூரிய மண்டலம் அங்கிருந்து விலகியிருக்கலாம் என்பதெல்லாம் ஆராய்ச்சி தியரிஇந்த பழங்கால அதிசய அறிவுகள் யாவும் பின்னாளில் பிரபஞ்ச கட்டளைபடி மறைந்தன, ஆபத்தான ஆயுதங்கள், இதர கிரகங்களுக்கு செல்லுதல் என எவ்வளவோ விஷயங்கள் மறைந்தன‌ஒரே ஒருவிஷயம் மட்டும் தொடர்ந்தது அது வானியல் அறிவு, இந்துக்கள் அதை பின்பற்றினர். பண்டைய பெரும் ஞானத்தின் அடையாளமாக அது ஒன்றுதான் தொடர்ந்ததுவானியல் அறிவு என்பது கணக்கீடு, அந்த கணக்கினை துல்லியமாக செய்தால் கோள்கள் சஞ்சாரம் அதன் இயக்கம் அதனால் பிரபஞ்ச வீதியில் ஏற்படும் கதிரியக்கம், அந்த ஈர்ப்பு விசை கதிவீச்சுக்களால் பூமியில் ஏற்படும் மாற்றம் என எல்லாமும் கணிப்பதுஇந்திய இந்துக்கள் அதில் கரைகண்டு இருந்தார்கள்இந்திய வானியல் என்பது பிராமண சொத்து என்பது போலவும், ஆரியர் எங்கிருந்தோ அதை கொண்டுவந்து இங்கே புகுத்தினர் என்பதெல்லாம் கட்டுகதை, அந்த அறிவு இந்துக்களின் அடையாளமாய் இருந்ததுஅந்த அறிவினை இந்துமதம் உலக நன்மைக்கும் நாட்டின் நன்மைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் பயன்படுததிற்றுபரந்த அண்டத்தை 360 டிகிரியாக பிரித்து அதன் 27 நட்சத்திரமண்டலமும் சொல்லி அதன் இயக்கத்தை சொல்லி அதனால் பூமியில் ஏற்படும் சஞ்சார பலனையும் சொல்லிற்றுகோள்களின் சுற்றுபாதை அவை சுழலும் வேகம், அதன் இயக்கத்தால் ஏற்படும் நன்மை தீமைகளை தெளிவாக சொல்லிற்றுஉதாரணம் பல உண்டு சென்றாலும் சனி கிரகம் மெதுவாக சுழலும் என்பதால் அதை “மந்தன்” என்றது, இன்று விஞ்ஞானம் அதனை ஒப்புகொள்கின்றதுசில கிரகங்கள் சந்திக்கும் புள்ளியின் நிழலை சாயா கிரகம் என்றது, ராகு கேது என்றது. இன்று அவற்றை விஞ்ஞானம் ஒப்புகொள்கின்றதுஇப்படி என்றோ இந்துக்கள் சொன்ன எல்லாவற்றையும் இன்று விஞ்ஞானம் ஒப்புகொள்கின்றதுவானியல் அறிவில்தான் இந்தியர்கள் பஞ்சாங்கம் வகுத்தார்கள், நாள் நட்சத்திரம் எல்லாம் குறித்தார்கள்அந்த அறிவில்தான் மழைகாலம், பஞ்சம், பருவகாலம், கொடும் மழை, வறட்சி என எல்லாம் முன் கூட்டியே சொன்னார்கள்ஒவ்வொருவனின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து அவனையே மன்னன் முதல் தளபதி வரை உயர்த்தினார்கள்வானியல் அறிவாலே முக்காலமும் கணித்து நாட்டையும் மக்களையும் வழிநடத்தினார்கள், போர்கள் முதல் விதைப்பு வரை வானியல் அறிவோடு நடத்தினார்கள்அதனில்தான் பாரத தேசம் உலகின் ஒப்பற்ற தேசமாய் ஒளிர்ந்ததுஎங்கோ ஒரு நட்சத்திரம் உதிக்க கண்டு இஸ்ரேல் சென்று இயேசு எனும் ஞானகுழந்தையினை அடையாளம் காணும்படி இந்தியரின் ஜாதக அறிவு இருந்ததுஇன்னும் எவ்வளவோ சான்றுகள் உண்டுஅந்த அறிவுதான் பாரத மக்களை உயர்த்தியது, செல்வமும் ஞானமும் மிக்க நாடாக இந்நாட்டை ஆக்கிவைத்ததுமனநலம், உடல்நலம் என எல்லாவற்றுக்கும் வானியல் கிரக இயக்கங்களை சொன்னார்கள் அதன் பாதிப்புக்களை சரி செய்யும்வழியும் சொன்னார்கள், மனநலமும் உடல்நலமும் ஒருங்கே பெற்ற அச்சமூகம் உலகில் தனித்து நின்றதுமானிட சிந்தனைக்கும் மனநிலைக்கும் தெளிவான முடிவுகளுக்கும் கிரகங்களின் தொடர்பும் காரணம் என அழுத்தமாக சொன்னமதம் இந்துமதம், அந்த அளவு சூட்சும நுணுக்கம் அவர்களுக்கு இருந்ததுவானியல் கணக்கீடுகளை துல்லியமாக செய்யும் அளவு கணக்கீட்டு முறைகளும் இதர வழிகளும் அவர்களுக்கு வழி வழியாக தெரிந்திருந்தன, ஞானியரும் ரிஷிகளும் சொன்னதை அப்படியே காத்து வந்தார்கள்ஜாதகம் பார்த்து திருமணம் செய்த காலங்களில் அதாவது நல்ல ஜாதக அடிப்படையில் நடந்த திருமணங்கள் பெரும்பாலும் பொய்க்கவில்லை, அவர்களின் சந்ததிகளும் நோய்களன்றி வளர்ந்தன‌செவ்வாய் தோஷம் என்பது இன்று பிபாசிட்டிவ் ரக ரத்தத்தை குறிக்கும் , அப்படிபட்ட ரத்தம் கொண்டவர்களுக்கு எல்லா ரத்தமும் சேராது மீறி சேர்த்தால் ஆரோக்கிய குறைவான குழந்தை பிறக்கும் நோய்கள் தொற்றும்ஜாதக பொருத்தம் என்பது உடல் ரத்த ரீதியாக சித்தம் ரீதியாக இணைகள் தொடருமா சந்ததி பெருகுமா என ஆய்வதே, அதை வானியல் அறிவுடன் இந்துக்கள் சரியாக செயதார்கள்என்று அரைகுறை ஜோதிடமும் அதையும் நம்பாத பகுத்தறிவு கூட்டமும் பெருகிற்றோ அன்றுதான் நோய்களும் பெருகிற்று’பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி, சனி கிழமை நல்லெண்ணெய் குளியல், இதர நாட்களில் இதர விரதம் என வானியலை சரியாக கண்த்து அதற்குரிய வழிகளை பின்பற்ற சொன்னார்கள் அதை பின்பற்றியது வரை உலகில் கொடிய நோய்கள் இல்லைவாரத்தின் ஏழு கிழமையும் ஏழு கிரகங்களின் தாக்கம் இருக்கும் என்பதை உணர்ந்து அவற்றின் பெயரிட்டு அன்று எதை உண்ணவேண்டும் எதை உண்ணகூடாது என்றார்கள் , அன்று நோய்கள் இந்த அளவு இல்லைஆம், கிரக நிலைகளுக்கும் மானிட உடலுக்கும் தொடர்பு உண்டு என ஆச்சரியமாக நிறுவிய மதம் இந்துமதம்இன்னும் அஷ்டமி ,நவமி என பல காலங்களை சொல்லி அந்நேரம் மானிட சிந்தனை குழம்பும் அப்பொழுது எடுக்கும் முடிவு சரியாக இருக்காது என்றார்கள் அவற்றை அசுப நாட்களாக குறித்தார்கள்எந்த கிரகநிலையில் மனம் தெளிவாக இருக்குமோ அதை சுபநாட்கள் என்றார்கள்இப்படி இந்துக்கள் வானியலில் கரைகண்டவர்கள் அதன் ஒரு பகுதியினைத்தான் பஞ்சாங்கம் ஜாதகம் என சொன்னார்கள், மக்களையும் உலகையும் வழிநடத்த சொன்னார்கள்அதனால் விவசாயம், கடற்பயணம், ஆட்சி, கலை, போர், நிர்வாகம், வியாபாரம் என எல்லாமும் செழித்ததுஇது இந்துக்களின் வானியல் அறிவில் வெறும் 10 சதவீதமேஇன்னும் ஏராளமான வானியல் அறிவினை எளிதில் யாருக்கும் புரியா வண்ணம் புராணமாகவும் தேவலோக கதைகளாகவும் சொல்லி வைத்தார்கள்பகவான் படுத்திருப்பது பால் கடல் என்றார்கள், இப்பொழுது விஞ்ஞானம் தனக்கு தெரிந்த மண்டலத்தை “பால் வெளி” என்கின்றதுபகவானின் படுக்கையினை பாம்பு தாங்கும் என்றார்கள், இன்று விஞ்ஞானம் குழாய் போன்ற கண்ணுக்கு தெரியா அமைப்பு பல அண்டங்களை தொடர்ச்சியாக இணைக்கலாம் என்பதை சொல்கின்றதுபறக்கும் ரதங்கள் சாத்தியம் கண்டம் விட்டு கண்டம் அல்ல, அண்டம் விட்டு அண்டம் செல்லலாம் என்பதை எவ்வளவோ இடங்களில் சொன்னார்கள்மயன் கதையினை சொல்லி வைத்தவர்கள் இந்துக்கள், அந்த சாயலில்தான் இன்று வானியல் விண்வெளி நிலையங்கள் கட்டபடுகின்றன‌கிரகங்களுக்கான ஈர்ப்பு விசையினை என்றோ புராண வடிவில் சொன்ன மதம் இந்துமதம், அவற்றின் நிறம் கதிரியக்கம் தன்மையினை கூட சொன்னதுகண்காணா கிரகங்களுக்கான துணை நிலாக்களை கூட தோழியர் மனைவி என மானிடருக்கு புரியும் வகையில் சொன்னமதம் அது, இன்று விஞ்ஞானம் அதனை உறுதிபடுத்துகின்றதுஇன்னும் எவ்வளவோ சான்றுகள் சொல்லலாம் என்றாலும் ஐன்ஸ்டீன் தியரி ஒன்றும் இந்துக்களின் புராண கதை ஒன்றும் அப்படியே பொருந்துவதுதான் இந்துமதம் எவ்வளவு பெரும் வானியல் அறிவை கொண்டிருந்தது என்பதற்கான சான்றுஐன்ஸ்டின் தியரிபடி ஒளிவேகத்தில் செல்லும் ராக்கெட்டில் ஒருவனை வைத்து சூரிய மண்டலத்துக்கு அப்பால் அனுப்பிவிடவேண்டும், பூமி சூரியனை சுற்றுவதை சுற்றிகொண்டே இருக்கட்டும்அப்படி செல்லும் ராக்கெட் திரும்பி வந்தால் பூமி சூரியனை சுற்றியதால் இங்குள்ளோருக்கு வயதாகி இருக்கும் ஆனால் ராக்கெட்டில் சென்றவன் எந்த வயதில் எந்த இளமையில் சென்றானோ அதே உருவத்துடன் திரும்புவான்விண்வெளியின் அதிசயம் இது, காலம் நேரத்தை மானிடன் வெல்லலாம் இரண்டும் இல்லா விண்வெளியில் இது சாத்தியம் ஆனால் ஒளிவேக விண்கலம் அமைக்க பலநூறு வருடமாகலாம் என்றார்இந்துக்களின் புராண கதையில் ஒரு ராஜா தேவலோகம் சென்றுவிட்டு ஒருநாளில் திரும்புவான் ஆனால் பூமியில் அவனின் 100ம் சந்ததி ஆட்சியில் இருக்கும் அந்த அளவு ஆயிரம் ஆண்டுகள் ஓடியிருக்கும் என்றொரு கதை உண்டுஇன்னும் எவ்வளவோ அதிசய செய்தியும் ரகசியங்களும் உண்டுமருத்துவம், அணுவியல், பிரபஞ்ச ரகசியம் என எவ்வளவோ விஷயங்களை உள்ளடக்கியது இந்துமதம், வானவியலும் அதில் ஒன்றுஅந்த வானவியலில் வெறும் 10 சதவீதமேதான் ஜாதகம் ஜோதிடம் என வெளியே தெரிந்ததே தவிர மீதி 90% உண்மைகள் உறங்கிகொண்டிருக்கின்றன‌விஞ்ஞானம் என்பது அடிக்கடி மாறும், வளரும்அப்படி வருங்காலத்தில் விஞ்ஞானம் முழு வளர்ச்சி காணும்பொழுது இந்துக்கள் சொன்ன ஒவ்வொன்றும் உண்மை என உலகம் ஒப்புகொள்ளும்விஞ்ஞானம் எவ்வளவும் வளரட்டும் அது முடியும் இடம் இந்துமதமாகத்தான் இருக்கும், இந்துமதம் வாழ்வை கடந்துவிட்ட ஞானியின் பக்குவத்தில் எல்லாம் கண்டு எல்லாமே இறைவனுக்கு கட்டுபட்டது மனிதனால் எதையும் படைக்கவோ காக்கவோ அழிக்கவோ முடியாது மனிதன் வெற்று கனவில் வாழ்பவன் என்பதை உணர்ந்து போதிக்கும் மதம்அந்த ஞானியின் முன் குழந்தை ஆசையாக மணல்வீடு கட்டுவது போல் விஞ்ஞானம் எது எதையோ சொல்லும், அதை இந்துமத விரோதிகள் பிடித்துகொண்டு அந்த மதத்தையும் அதன் நுணுக்கமான விஷயங்களையும் பழித்து கொண்டிருக்கின்றார்கள்குழந்தை தன்முன் விளையாடுவதை போல அவர்களை கண்டு புன்னகைத்து கடந்து செல்கின்றது இந்துமதம்506People reached171Engagements-1.3x averageDistribution scoreBoost post

95957 comments21 sharesLikeCommentShare