இந்தியாவில் அரசியவாதிகள் தவிர பிரதமராக கூட வந்திருக்கும் வாய்ப்பு கொண்டவர் ஒரே ஒருவர்தான்அவர் நாட்டிற்காய் உழைத்த உழைப்பும் அவரின் சாதனையும் அப்படிபீல்டு மார்ஷல் மானெக்க்ஷாபிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவத்திலே இணைந்து இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்று இன்னும் பல சாதனைகளுடன் அவர் சுதந்திர இந்திய ராணுவத்தின் பிரதான தளபதியானார்பிறப்பால் பார்சி இனத்தவரான அவர் இந்திய விடுதலைக்கு பின்னும் இந்தியாவிலே இருந்து இந்தியாவின் ராணுவத்தின் பிரதான தளகர்த்தராக வலம் வந்தார்1947க்கும் 1950க்கும் இடைபட்ட காலங்களில் காஷ்மீரில் அவரின் பங்களிப்பு இருந்தது, திம்மையா கரியப்பா போன்ற பிரதான தளபதிகளுடன் முழு காஷ்மீரையும் ஒரு நாளில் பிடித்துவிடலாம் என அவர் சொன்ன ஆலோசனையெல்லாம் நேருவிடம் எடுபடவில்லைகரியப்பாவின் சொல்லை மட்டும் நேரு கேட்டிருந்தால் காஷ்மீர் இவ்வளவு சிக்கலாகியிருக்காது, இந்திய ராணுவத்தின் ஆலோசனையினை விட பாகிஸ்தானின் ஜின்னா ஓய்வெடுக்க பாதி காஷ்மீராவது வேண்டுமே எனும் நேருவின் கவலைதான் வென்றதுபாகிஸ்தானின் லியாகத் அலிகானுடன் நேரு செய்த ஒப்பந்தம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியபொழுது ராணுவத்தார் மனம் கலங்கியது அதில் மானெக்சாவும் ஒருவர்1962 யுத்தமும் நேருவின் கர்வபடிதான் நடந்தது, அப்போரிலும் பிரதான தளபதிகளை நேரு களமிறக்கவில்லை ஒதுக்கிவைத்துவிட்டார், அதை விட கொடுமையாக தன் சகா கிருஷ்ணமேனனின் பேச்சை கேட்டு தன் அடிமைகளில் ஒருவரும் அறவே திறமை இல்லாதவருமான தாப்பாரை தளபதியாக்கினார்சீனாவில் சுமார் 10 வயதிலே துப்பாக்கி தூக்கிய மாவோ, துப்பாக்கி முனையில் சீன தலைவிதியினை மாற்றிய மாவோ அங்கு அதிபராக இருந்தான் அவன் சரியான தளபதியாக லோவ் ரிங் என்பவனை சீன படைகளின் தளபதியாக்கி யுத்தம் தொடங்கினான்அஹிம்சை, சத்தியாகிரகம், உல்லாச சிறைவாழ்வு என சுதந்திரத்துக்கு போராடிய நேரு திறமையில்லா தாப்பரை வைத்து யுத்தம் தொடக்கி நாட்டுக்கு பெரும் பின்னடைவினை பெற்று தந்தார், அவருக்கும் யுத்தம் தெரியாது அவர் தளபதிக்கும் தெரியாதுஇப்படியெல்லாம் நேருவினால் அவமானபடுத்தபட்ட உயர்தளபதிகளை இந்திராதான் களத்துக்கு கொண்டுவந்தார், அப்படி வங்கபோரில் தலமை பொறுப்பை ஏற்றார் மானெக்சாஉலகின் மிக சுவாரஸ்யமான விறுவிறுப்பான போர்களில் அதுவும் ஒன்றுவங்கபோரில் அவர் காட்டிய வியூகமும், அதிரடியும்தான் 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்களை பிடித்து போரில் வெற்றிபெற வைத்ததுஅவர் பெயரை கேட்டாலே பாகிஸ்தான் அலறியது, அப்படி மிரட்டி வைத்திருந்தார்.வல்லரசு நாட்டு தளபதிகள் கூட பார்த்து வியந்த வியூகம் அது, இஸ்ரேலிய பீஷ்மர் மோஷே தயானே பாராட்டிய வியூகம் அதுஇந்தியாவின் யூத தளபதி ஜேக்கப்புடன் இணைந்து வங்கதேச ஆறுகள் வழியாக டாங்கிகளை கொண்டு சென்று டாக்காவில் இருந்த பாகிஸ்தானிய படைகளை அவர் முற்றுகையிட்ட வியூகம் உலகளவில் பிரசித்தியானதுஅமெரிக்க ஹாஜி நீர்மூழ்கி கப்பலுடன் பாகிஸ்தான் பலம்காட்ட அதை விசாகபட்டினம் அருகே உடைத்து போட்ட அவரின் தந்திரோபாயம் கொண்டாடபட்டதுஅந்த போருக்குபின் இந்தியா எங்கும் கொண்டாடபட்டார், கொண்டாட்டம் என்றால் மிக பெரும் கொண்டாட்டம்அந்த புகழை சரிவர கையாண்டிருந்தால் அவர் பிரதமராக கூட வந்திருக்கலாம், ஆனால் அவர் அதனை மறுத்து தமிழத்து ஊட்டியில் நீண்டகாலம் வசித்து 2008ல் காலமானார்கிட்டதட்ட அப்துல்கலாமிற்கு இருந்த நன்மதிப்பினை விட பெரும்மடங்கு வரவேற்பு அவருக்கு இருந்ததுமத, இன,மொழி வேறுபாடு தாண்டி இந்தியர்களால் இந்தியனாக கொண்டாடபட்ட பெரும் ஆளுமை அவர்இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் அவர்தான், இவருக்கு சீனியரான கரியப்பாவுக்கு பின்னாளில்தான் அப்பட்டம் கொடுத்தார்கள்இந்திய ராணுவத்தில் மறக்க முடியா பெருமகன் அவர், இத்தேசத்திற்காக உழைத்த மாமனிதரில், இத்தேசத்தின் கவுரவத்தை காத்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அவர்தான்அவருக்கு இங்கு பாரத ரத்னா இல்லை, ஆம் இல்லை அதுதான் அன்றைய‌ பாரதம், நாட்டிற்காக உண்மையாய் உழைத்து உயிரைகொடுத்து தேசத்தை காத்தவர்களை எல்லாம் புறக்கணிப்பார்கள்காங்கிரசிடம் எமக்கு வருத்தமான சில விஷயங்களில் இதுவும் ஒன்று, உறுதியாக சொல்லலாம் இந்த பாஜக அரசு அன்று இருந்தால் கலாம் கொண்டாடபடுவது போல மானெக்சாவும் கொண்டாடபட்டிருப்பார்மானெச்சாவுக்கும் இந்திராவுக்கும் இருந்த சில உரசலே சிக்கலுக்கு காரணம், வங்கபோரின் வெற்றியில் மானெக்சா கொண்டாடபட்டதை இந்திரா ரசிக்கவில்லைஇத்தோடு காஷ்மீரையும் மீட்டுவிடலாம் என மானெக்சா கிளம்பியதற்கு இந்திரா அனுமதிக்கவில்லை, சிம்லா ஒப்பந்தத்தில் பாகிஸ்தானை முடக்கி வைக்க மானெக்சா சொன்ன பல கருத்துக்களை இந்திரா ஏற்கவில்லைமானெக்சா சொற்படி கேட்டிருந்தால் பல சிக்கல்கள் இன்று இருந்திருக்காதுஇந்தியாவுக்கு நிம்மதி கொடுக்கும் எந்த விஷயத்தையும் காங்கிரஸ் செய்யாது, செய்யவும் விடாது அதன் கொள்கை அப்படிஇந்தியரின் வீரத்தை உலகுக்கு சொல்லி இன்றுவரை இந்தியாவின் நம்பர் 1 தளபதியாக நிற்கும் அந்த மாவீரனுக்கு இன்று நினைவு நாள்தமிழகம் எவ்வளவு முட்டாள்தனமான மாநிலம் என்பது மானெக்சாவினை கண்டாலே விழங்கும்1976க்கு பின் அந்த மாவீரன் ஊட்டியில்தான் வாழ்ந்தான், இந்த தேசத்துக்கே பெரும் விடுதலை கொடுத்த, கிழக்கு பாகிஸ்தானை உடைத்துகாட்டிய மாவீரன் தமிழக ஊட்டியில் வாழ்ந்தான்அதுவும் 2008 வரை வாழ்ந்தான்இங்கு அவனை அழைத்து சுதந்திர நாள், குடியரசு நாளில் தேசிய கொடியேற்ற கூட யாருமில்லை, ஒரு ஊடகமாவது அவரை பேட்டி கண்டதா என்றால் அதுவுமில்லைதிராவிட தலமைகள் ஒருவராவது அப்பெருமனை சந்தித்த புகைபடம் உண்டா என்றால் அதுவுமில்லைசரி, தமிழக திராவிட கும்பலை விடுங்கள் காங்கிரஸ் தலைவர்கள் அவரை சந்தித்தார்களா என்றால் அதுவுமில்லைபாகிஸ்தான் ராணுவத்தையே குதறி சுமார் 1 லட்சம் வீரர்களை கைதுசெய்த அந்த சிங்கம், 1989களில் தமிழ்நாட்டில் இந்திய ராணுவம் இலங்கை நடவடிக்க்காக “சாத்தானின் படைகள்” என விமர்சிக்கபட்ட பொழுது நெஞ்சில் ரத்தம் வடிய காட்சிகளை கண்டதுஇந்திய ராணுவம் புலிகளால் சுமார் 1200 பேர் இலங்கையில் கொல்லபட்டபொழுது அந்த புலிகளுக்கு தமிழகத்தில் சிகிச்சை என்பதை கண்ணீரோடு கண்டதுஇந்திய ராணுவத்தை வரவேற்கமாட்டேன் என கருணாநிதி அரசியல் எனும் பெயரில் ராணுவத்தை அவமானபடுத்தியபொழுது மானெக்சா மனம் என்னபாடு பட்டிருக்கும்?காங்கிரஸ் எவ்வளவு பெரிய கெடுதலை எல்லாம் இந்நாட்டுக்கு கொடுத்தது, கலாம் முதல் மானெக்சா வரை எப்படியெல்லாம் புறக்கணிக்கபட்டனர் என்பதெல்லாம் வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்றுவாழும் காலத்தில் அம்மனிதனை கொண்டாடியிருக்க வேண்டும், இச்சமூகம் அதை செய்யவில்லைஇனியாவது செய்யட்டும், ஊட்டியில் அம்மாவீரனின் பிரமாண்ட சிலை திறக்கபடவேண்டும், அங்கு அவனுக்குரிய அங்கீகாரம் வழங்கபட வேண்டும்இன்று அந்த மாவீரனின் நினைவு நாள்உலகின் கடந்த‌ நூற்றாண்டின் ஒப்பற்ற தளபதிகள் என சொல்லபடும் ஜெர்மானிய தளபதிகளின் தலைவன் ஹிட்லர், அமெரிக்காவின் மெக் ஆர்தர், ரஷ்யாவின் ஜார்ஜ் சுக்கோவ், இஸ்ரேலின் மோஷே தயான் வரிசையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அந்த நாயகனுக்கு இன்று நினைவுநாள்இந்தியரின் வீரத்தையும் மதியுகத்தையும் உலகுக்கு சொல்லிய அம்மாவீரனுக்கு கம்பீர வீரவணக்கம்வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்