பஞ்சாங்கம் என்பது என்றோ உருவான மூடநம்பிக்கையோ கட்டுகதையோ அல்ல, இன்றும் என்றும் வானியலில் இந்துக்களுக்கு இருந்த பெரும் அறிவை சொல்லும் விஞ்ஞான கணக்குஉலகில் எல்லா நாடுகளுக்கும் காலண்டர் எனும் நாள்காட்டி இருந்தது, ஆனால் இந்துக்களின் பஞ்சாங்கம் அளவு துல்லியமான கணக்கீடு எங்கும் இல்லைஐரோப்பியருக்கு காலண்டரே முதலில் கிடையாது, கிரேக்கர்கள் இந்திய தொடர்புக்கு பின் சில மாற்றங்களை செய்து காலண்டர் உருவாக்கினார்கள், அவர்கள் காலண்டர் வெறும் 10 மாதம் கொண்டது ஆனால் மாதங்களுக்கு 33 நாட்களுக்கு மேல் இருந்தன‌அவர்கள் இந்திய மாத பெயர்களை அவர்கள் காலண்டருக்கு மாற்றினார்கள், அவர்கள் பருவகாலத்துக்கு மாற்றினர்கள், ஒவ்வொரு கிரக ஆதிக்கத்தில் பெயரிட்டார்கள் அல்லது கிரகங்களின் பெயர்களில் இட்டார்கள்ஜனனம் எனும் சொல் ஜனவரியாயிற்று அதுதான் தொடக்கம்தூய்மையான கிரகம் என சொல்லபட்ட (புதனாக‌ இருக்கலாம்) என்ற பெயர் லத்தீனில் பெப்பிரோ என்றாகி பிப்ரவரியானதுசெவ்வாய் கிரகம் மார்ஸ் என்றாகி மார்ச் ஆயிற்றுஏப்ரல் என்பது வீனஸ் எனு வெள்ளிகிரகத்தின் பெயரில் இருந்து வந்ததுமாயா தேவியின் பெயரால் அழைக்கபட்ட மாதம் மா அல்லது மே ஆயிற்று, இவை மாயகிரகங்களின் பெயர் என்பார்களும் உண்டுஜூன் மாதம் ஜூனியஸ் எனும் ரோமை தெய்வத்தின் பெயரில் இருந்து வந்தது, ஜீனியஸ் எனும் பெயரின் பொருள் இது, குரு கிரகத்தைத்தான் அப்படி அழைத்தார்கள்சப்தம் எனும் ஏழாம் மாதம் சப்தமாகி செப்டம்பர் ஆயிற்றுஅஷ்டம் எனும் எட்டாம் மாதம் அக்டமாகி அக்டோபர் ஆயிற்றுநவம் எனும் ஒன்பதாம் மாதம் நவம்பர் ஆயிற்றுதசம் எனும் பத்தாம் மாதம் தசம்பர் என்றாகி டிசம்பாராயிற்று மார்ச் பெயர் காரணம்ஜூலை மாதமும், ஆகஸ்டு மாதமும் ஜூலியஸ் சீசருக்கும் அகஸ்டஸ் சீசருக்கும் கொண்டாட்டம் செய்ய உருவான மாதங்கள்ஆக 10 மாதங்கள் என கிரேக்கர் சுருக்கிய மாதங்களைத்தான் 12 மாதங்களாக ரோமையர் திருத்தி தங்கள் காலண்டராக்கினார்கள் இதை போப்பாண்டவர் உலக காலண்டராக்கினார்அவர்கள் ஆட்சி செய்த இடமெல்லாம் திணிக்கபட்டு இன்று அது வழமையானதுஇது மாதமும் தேதியும் கொடுப்பதோடு சரி வெறு எந்த தகவலையும் சொல்லாது அல்லது அவர்கள் கலாச்சாரமும் அறிவும் அப்படித்தான்ஆனால் இந்துக்களின் நாள்காட்டியான பஞ்சாங்கம் மிக துல்லியமானது, அது ஐந்து அம்சங்களை கொண்டதால் பஞ்சாங்கம் எனபட்டதுவாரம்,திதி,கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து பெரும் பிரிவுகளை கொண்டதுவாரம் என்பது 7 நாட்களை கொண்டதுதிதி என்பது நிலவின் இடத்தை பொறுத்து தேய்பிறை வளர்பிறையாக 30 திதிகளை கொண்டதுகரணம் என்பது திதியில் ஒரு பாகமாக வரும் 11 பிரிவுகளை கொண்டதுநட்சத்திரம் 27 கூட்டங்களை கொண்டது, ராசிமண்டலம் என 12 பிரிவுகளாக வானத்தை பிரித்து அவற்றுக்குரிய நட்சத்திரங்களாக வகுத்தது (இன்று விஞ்ஞானம் கண்ட நட்சத்திரங்களை அன்றே ஞானத்தால் உணார்ந்தவர்கள் இந்துக்கள்)யோகம் என்பது சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்கும் நேரம் இது 27 வரும்இப்படி துல்லியமாக ஒரு நாளை வெறும் தேதியாக குறிப்பிடாமல் அன்றைய சூரிய சந்திர நிலை நட்சத்திர நிலை இன்னும் கிரகங்கள் நிலை அவை மாறும் நேரம் என துல்லியமாக சொன்ன நாட்காட்டி அன்றும் இன்று இந்துக்களை தவிர யாரிடமும் இல்லைஅது நாளை மட்டும் காட்டாது, கிரக நிலைகளை சரியாக சொல்லும், சூரியன் உதிக்கும் அஸ்தமிக்கும் நேரத்தை சொல்லும், சந்திரனின் நிலையினை சொல்லும் அதனால் மழை வருமா இல்லையா என சொல்லும்60 ஆண்டு சுழற்சியின் வருடங்களில் எப்பொழுது மழைவரும், எப்பொழுது வெள்ளம் வரும், என்னென்ன ஆபத்து எப்படி வரும் என முன்கூட்டியே சொல்லும்அது தனிமனிதனுக்கான எதிர்காலம் முதல் நாட்டுக்கான கணிப்பையும் துல்லியமாக சொல்லும்அதனால்தான் அன்றைய இந்தியா அவ்வளவு வளமாய் செல்வமாய் இருந்தது, பஞ்சாங்க வாழ்வு அந்த அதிசயத்தை செய்ததுஎது நல்ல நேரம் எது ஆகாத நேரம் என அவர்கள் வகுத்ததெல்லாம் மனமும் சிந்தையும் கிரகபலன்களால் உற்சாகமாக அல்லது முடங்கியிருக்கும் விஷயம் அன்றி வேறல்ல‌அந்த பஞ்சாங்கம் கிரக நிலைகளை சரியாக சொல்லும், கிரகநிலைகளை பொறுத்துத்தான் ராக்கெட் ஏவமுடியும், காரணம் கிரகங்களின் குறுக்கீடு மட்டுமல்ல அவற்றின் ஈர்ப்பு விசை கூட பாதிப்பை ஏற்படுத்தும்எல்லா நாட்களிலும் ராக்கெட்டுகளை ஏவமுடியாது சரியான கிரகநிலையும் நிலவு ஈர்ப்பும் சரியாக வரவேண்டும்அதை இன்றைய விஞ்ஞானம் டெலஸ்கோப் வைத்து தேடுவதை விட இந்துக்களின் பஞ்சாங்கத்தால் எளிதில் கணிக்கலாம் என்பதை ஆய்வின் முடிவில் உறுதிபடுத்தியிருக்கின்றதுஇதைத்தான் மாதவனும் சொன்னார் அதற்குத்தான் பாய்கின்றார்கள்இங்கு இவர்கள் பொங்காமல் இருக்க இப்படித்தான் பேசவேண்டும் “தமிழருக்கு ஆடை தந்து சிந்திக்க சொன்னவர் ராம்சாமி, தமிழனுக்கு அரிசிசோற்றை அறிமுகபடுத்தியவர் அண்ணாகுழம்பு என ஒன்றை ஊற்றி சாதம் பிசைந்து கொடுத்தவர் கருணாநிதி”தமிழர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வெள்ளையன் ஆட்சியில் இருந்தாலும் ஏன் நாயக்கனும் நவாப்களும் வாள்முனையில் மிரட்டி ஆட்சியில் இருந்தாலும் அவர்களை மீறி அடக்கி வைத்தவன் பார்ப்பான், சொத்துக்கும் காசுக்கும் வழியில்லாமல் பராரியான கத்தியோ துப்பாக்கியோ தூக்கதெரியாத பார்ப்பான் அடக்கி வைத்தான் என சொன்னால் கைதட்டி ரசிப்பார்கள்அவர்கள் உலகம் தனி, அவர்கள் கற்பனை தனி, அவர்களுக்கான சிந்தனையும் வரலாறுமே தனி, அந்த கற்பனை உலகத்தில் அவர்களுக்கான எதிர்பார்ப்பே வேறுஅவர்கள் அப்படித்தான் இருப்பார்கள், நாள்பட்ட பைத்தியங்களை எளிதில் குணபடுத்தமுடியாது அப்படியே பரிதாபமாக கைவிட்டுவிடுவதுதான் சரி