ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 100 – அருளுடமை / குறள் : 07
சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும்”
இக்குறள் “சிந்தையுள் நின்ற சிவனருள் பெற்றக்கால் பந்தமும் பாசமும் அறும்” என்பது பொருள்
ஞானத்தின் அதி உச்சம் என்பது லவுகீக வாழ்வின் பந்தம் ஒரு கால்விலங்கு எனபதும் பாசம் ஒரு கைவிலங்கு என்பதும் அறிந்து அதனை அறுப்பது
இது எல்லா மானிடருக்கும் வராது ஞானிகளுக்கே வரும் பெரும் பக்குவ நிலை, அந்த நிலையினை அருள்வது சிவனால் மட்டும் முடியும் காரியம்
பாசம் என்றால் கயிறு என பொருள், அதனால்தான் எமதர்ம ராஜனின் கையில் இருக்கும் கயிற்றை பாசகயிறு என்றார்கள்
பிள்ளையாரும் இன்னும் சில தெய்வங்களின் கையில் கோடரியினை ஏன் கொடுத்தார்கள் ஞானியர்? அவர்கள் பாசகயிற்றினை வெட்ட வல்லவர்கள் ஞானம் அருள வல்லவர்கள் எனும் பொருளில் கொடுத்தார்கள்
இந்த உலகில் ஒவ்வொருவரையும் ஒரு ஈர்ப்பு ஈர்த்து வைத்திருக்கின்றது, புவிஈர்ப்பு விசை என எல்லா பொருளையும் இழுக்கும் பூமியில் ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு மாயையால் ஈர்க்கபடுகின்றது
அது மண், பெண், பொன், பாசம், பந்தம், செல்வாக்கு, சொத்து, அதிகாரம், செல்வாக்கு என ஏகபட்ட ஆசைகளை கொண்ட உலகில் ஒவ்வொரு வகையாக ஈர்க்கபடுகின்றது
இந்த பந்த பாச மாயைகளை அறுத்தெறிந்தால் ஆத்ம ஞானம் கிட்டும்
அந்த ஆத்ம ஞானத்தை வழங்கும் சிவன் நம் மனதிலே இருக்கின்றார், அவரை முழுக்க சிந்தனையில் நிறுத்தி ஆத்மாவினால் சிவனை உணர்ந்தால் அவர் ஞானம் கிடைக்கும் அந்த அருளால் பற்றும் பாசமும் அறுபடும் என்கின்றார் ஒளவையார்
பந்தபாசம் ஏன் கூடாது என்றார்கள் என்றால் கடமையினை செய் பலனை எதிர்பாராதே எனும் பொருளில் சொன்னார்கள்
உறவும், பிள்ளைகளும், அழகும், செல்வமும், சொத்தும், ஆட்சியும், செல்வாக்கும், புகழும் யாருக்கும் சொந்தமானது அல்ல , அதெல்லாம் மாறிகொண்டே இருக்கும் மாயைகள் ஞானத்தை அடைய தடையாய் மயக்கும் மாயைகள் என்பதால் அந்த பற்றை அறுக்க சொன்னார்கள் ஞானியர், அதைத்தான் ஒளவையாரும் தன் குறளில் சிவனருளால் அறுக்க சொல்கின்றார்
“