ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 100 – அருளுடமை / குறள் : 08

“மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும்
ஈசனருள் பெற்றக் கால்.

இக்குறள் “மாசற்ற கொள்கை மதிபோலத்தான் தோன்றும் ஈசன் அருள் பெற்றக்கால்” என பிரிந்து பொருள்தரும்

மாசற்ற கொள்கை மனதில் சுத்தமான, கொஞ்சமும் கபடமற்ற எண்ணங்களை வளர்த்து கொள்வதாகும், இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால் பரிசுத்தமான நிர்மலமான மனம்

ஈசனின் அருள் பெற்றால் அங்கு நிர்மலமான குற்றமற்ற மனம் உருவாகும் என்பது குறளின் பொருள்

அதாவது ஈசன் எனும் சிவனின் அருள்பெற்றால் ஒருவனுக்கு நல்லறிவு உண்டாகும் , அந்த அறிவு நிர்மலமான பரிசுத்தமனதை கொடுக்கும் என்பது பொருள்

ஈசன் அருள் இருந்தால் நல்லறிவு உண்டாகும், அந்த அறிவில் நல்ல சிந்தனையும் ஞானமும் பெருகும் என்கின்றாள் ஒளவையார்

இதே குறளை முன்பு “”மாசற்ற கொள்கை மனத்தமைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு’ என அவர் பாடியிருந்ததும் நினைவுகூறதக்கது