குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 36″வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற்றூங்குங் களிறோ துயருறா – ஆங்கதுகொண்டூரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால்ஆருங் கிளையோ டயின்று”யானையானது பாகனால் தனக்கு ஊட்டபடும் உணவில் சில பருக்கைகள் கீழே விழுவது பற்றி கவலையுறாது, ஆனால் அந்த சிதறிய பருக்கைகள் எத்தனையோ கோடி எறும்புகளுக்கு உணவாகும் என்பது பொருள்அங்கணம் மிகுந்த கஞ்சதனம் செய்யாமல் வாழ்வது நல்வாழ்வாகும், நம் கையில் இருந்து சிதறும் சிறு பொருளும் ஏழைகளுக்கு பெரும் பொருளாக அமையும் என்பது குமரகுருபரர் சொல்லும் போதனை