நீதிநெறி விளக்கம் : 38
“மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை
ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய – மாகொல்
பகைமுகத்த வெள்வேலான் பார்வையில் தீட்டும்
நகைமுகத்த நன்கு மதிப்பு”
பரந்த வானமே சிறியது என்னும்படி செல்வத்தை அள்ளி அள்ளி மற்றவர்களுக்கு வழங்கிப் பெருமிதம் கொள்ளும் அரசன் முன், அதாவது வானம் மழைபொழிவதை விட அதிகமாக கொடைகளை வழங்கும் அரசன் முன்னால் , பகை யானையைக் கொல்ல அதன் முகத்தில் தன் வெற்றி வேலை எறியக் குறி பார்க்கும் வீரனின் பார்வைச் சிரிப்புக்கு இருக்கும் மதிப்பு மிக அதிகம் என்பது பாடலின் பொருள்
இதை இன்னும் விளக்கவேண்டும் என்றால் இப்படி சொல்லலாம்
ஒரு அரசன் ஆயிரகணக்கானோருக்கு தானம் செய்வான், அதாவது எண்ணற்றோர் அவனிடம் வந்து பொருள் வாங்கி செல்வர். ஆனால் அவர்களெல்லாம் அரசனின் மனதில் நிற்பவரும் அல்ல, அரசனிடம் மதிப்பு கொண்டோரும் அல்ல
அரசனுக்கு அவன் படையில் எதிரி யானையினை வீழ்த்திய வீரனின் முகம் நினைவில் இருக்கும் அவனுக்கு மதிப்பு கொடுப்பானே அன்றி தானம் பெறுவோரை மதிக்கமாட்டான்
அரசன் முன் தானம் எனும் யாசகம் பெறுவதை விட மதிப்பு பெறுவதே உண்மையான மரியாதை அதுவே உன்னதமானது என்கின்றார் குமரகுருபரர்
பகைப்புலத்துள்ள தன் பகைவராகிய விலங்குகளையெல்லாம் கொல்லுந் திறனுடைய ஒளிமிக்க வேலேந்திய அரசன் (தன்) மலர்ந்த முகத்திற் காணும் பார்வையில் தோற்றுவிக்கும் நன்மதிப்புக்கள்,
வானும் குறையும்படி (அவ்வளவு பெரிய) பொருட் குவியலைக் குவித்து அவை முழுமையும் அவரவர் தகுதிக்கேற்ப அவ்வரசன் அள்ளிக் கொடுத்தலைப் பார்க்கிலும்) செம்மாப்பு பெரிதுடையவாகும்.
தர்மரும் கர்னனனும் எத்தனையோ பேருக்கு தானம் அளித்தனர் ஆனால் அவர்களிடம் மதிப்பு பெற்றது வீரர்களும் ஞானிகளும் மட்டும்தான் என்பது இங்கு கவனிக்கதக்கது