ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – நினைப்புறுதல் / குறள் : 09

“மிக்க மனத்தால் மிகநினந்து சிந்திக்கில்
ஒக்க சிவனுருவ மாம்”

இக்குறள் “மிக்க மனத்தால் மிக நினைந்து சிந்திக்கில் ஒக்க சிவனுருவ மாம்” என பொருள் வர பிரியும்.

ஒரே சிந்தையாய் சிவனை மனமார நினைந்து தவமிருந்தால், சிவன் சாயலில் மாறலாம் என்பது பொருள்

இடையறாது சிவனையே மனதால் முழ்க்க நினைந்திருந்தால் சிவனின் அம்சத்தை பெறலாம், அந்த அம்சத்தில் சிவ தத்துவம் எனும் சித்தர்ர்களாகி அதிசயங்களை செய்யலாம் என்கின்றார் ஒளவையார்

சிவனை நெஞ்சில் சுமப்போர் சிவனின் வல்லமையெல்லாம் பெறுவர், எல்லா சித்திகளையும் கொண்ட அவர்கள் சிவன் செய்யும் அதிசயத்தையெல்லாம் செய்வார்கள் என்பது எல்லோரும் அறிந்தது

சிவனை முழுக்க நெஞ்சில் சுமந்தால் சிவமாகலாம் என்பதை சொல்கின்றார் ஒளவையார், எப்பொழுதும் சிவனை நினைந்து சிவனடியார்களாக அற்புதம் செய்யும் சித்தர்கள் எப்படி உருவாகின்றார்கள் எனபதன் மூல விஷயத்தை சொல்கின்றது குறள்