குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 49
“முயலாது வைத்து முயற்றின்மை யாலே
உயலாகா ஊழ்த்திறந்த என்னார் – மயலாயும்
ஊற்றமில் தூவிளக்கம் ஊழுண்மை காண்டுமென்று
ஏற்றார் எறிகால் முகத்து”
இப்பாடல் விதி மற்றும் ஊழ்வினையினை நம்பி முயற்சி செய்யாமல் இருத்தல் தவறு என்பதை போதிக்கின்றது
அதாவது ஒரு முயற்சியும் எடுக்காமல் எல்லாம் விதிபடி நடக்கும் என சோம்பலுடன் காத்திருப்பது என்பது சரியல்ல காரணம் சோம்பலும் விதிபடி நடக்கலாம், எந்த முயற்சியும் எடுக்காமல் விதியினை சாடுவது என்பது எனது ஊழ்வினை நல்ல வினை என்றால் எதிர்காற்றில் என் விளக்கெறியும் என விளக்கை ஏற்றி சோதிப்பதற்கு சமம் என்பது பொருள்
அறிவுடையோர் அப்படியான மடதனமான காரியங்களை செய்யமாட்டார்கள், காற்றுவரும்பொழுதான் தூற்றுவேன் என களத்தில் ஓய்ந்திருந்தால் நெல்லையும் பதர்களையும் பிரிக்கமுடியாது