இந்திய சுதந்திர வரலாறு : 02

அசோகரின் புத்த கொள்கையும் கொல்லாமையும் அஹிம்சையும் பெரும் பலவீனத்தை இந்தியாவுக்கு கொடுத்தது, இந்தியாவின் பெரும் அரசான அசோகரின் அரசு கொல்லாமையாலும் அஹிம்சையாலும் வீழ்ந்து பெரும் குழப்பத்தில் நாடு சிக்கியது

அந்நேரம் கிரேக்க ஆட்சியும் வலுவிழந்தது, அலெக்ஸாண்டருக்கு பின் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் கிரேக்கம் முதல் ஆப்கன் வரை நின்ற கிரேக்க சாம்ராஜ்யம் வலுவிழந்து நொறுங்கியது

அதில் பைசாண்டியர், பாக்ட்ரியா பல அரசுகள் ஆங்காங்கே தோன்றின, இன்றைய ஆப்கனை ஒட்டிய பகுதிகளில் இருந்தவர்கள் அப்படி கூடி இந்தியாவில் நுழைய முயன்றனர் அதில் வெற்றியும் பெற்றனர்

அசோகருக்கு காலத்துக்கு பின் தேசம் தோல்வியில் தத்தளித்தது சாகர்கள் எனும் அந்நிய கிரேக்க மரபினர் எளிதாக முன்னேறி பல பகுதிகளை பிடித்து பெரும் ஆபத்தாய் எழும்பினர்

கிமு 40 ஆண்டு காலங்கள் அவை

இனி கிரேக்க கலப்பின கைகளில் இந்தியா வீழும் அந்நாட்டின் இந்துமதமும் கலாச்சாரமும் வீழும் எனும் கலக்கம் ஏற்பட்டது, காரணம் கால்வைத்த இடமெல்லாம் ஒருநாட்டின் மதத்தையும் கலாச்சாரத்தையும் அழிப்பது கிரேக்க பாணி

அதை துருக்கி எகிப்து பாக்தாத் என எங்கெல்லாமோ செய்துவிட்டுத்தான் இந்தியாவுக்குள் வரபார்த்தபொழுது போரஸ் விரட்டினான், சாணக்கியனின் மவுரிய பேரரசு பெரும் சக்தியாய் அவர்களை தடுத்தது

சுமார் 200 ஆண்டு கழித்து அதே அச்சறுத்தல் எற்பட்டபொழுது உஜ்ஜைனி காளி அருளில் ஒரு மாவீரன் உருவானான், அவன் இன்றளவும் ஆச்சரிய பிறப்பு

அவனே விக்கிரமாதித்தன், காளியின் அருளால் தனி வீரனாக எழுந்த அவன் அந்த சாகர் கூட்டத்தை ஓட அடித்தான், அடித்தவம் மிகபெரும் இந்துராஜ்ஜியம் அமைத்து இந்துமதத்தையும் இந்நாட்டையும் காத்தான்

அவன் இந்தியாவில் பெரும் சக்தியாய் எழும்பியபொழுதுதான் மேற்கே சீசரும் இன்னும் பலரும் எழும்பினார்கள், ஜூலியஸ் சீசரை விட பெரும் பராக்கிரமசாலியும் யாராலும் வெல்லமுடியாதவனுமாக இருந்தான் விக்ரமாதித்தன்

உண்மையில் ரோமருக்கும் அதாவது ஜூலியஸ் சீசருக்கு பின்னரான அகஸ்டஸ் சீசர் காலங்களில் அவர்களும் அலெக்ஸாண்டர் பாணியில் இந்தியாவுக்குள் வரும் ஆசை இருந்தது, ஆனால் விக்கிரமாதித்தன் எனும் பெயர் அதனை தடுத்தது

இக்காலத்தில் ரோமையர் கப்பல் தமிழகம் வந்தன, இங்கு மூவேந்தர்கள் பலமாக இருந்த காரணத்தால் சமத்தாக வியாபாரம் மட்டும் செய்தனர், ஆட்சி நிறுவ முயற்சிக்கவில்லை

இந்த விக்கிரமாதித்தன் தன் தோளில் வேதாளத்தை போட்டு திரிந்தவன் என்பது ஒரு குறிப்பு

விக்கிரமாதித்தனின் அரசு நூறாண்டுகள் நிலைத்த நிலையில் குஷான அரசு எழும்பிற்று, தொடக்கத்தில் அது இந்து அரசாகத்தான் மலர்ந்தது

ஆனால் கனிஷ்கர் எனும் மன்னன் பின்னாளில் புத்தமதம் தழுவினான், எனினும் அசோகர் செய்த தவறை அவன் செய்யவில்லை, புத்தரின் கொள்கை வேறு அரசு ராஜ்ஜியம் வேறு என்பதில் சரியாக இருந்தான், அசோகரின் புத்தமத கருத்துகள் பலவற்றை அவன் மாற்றி வைத்தான்

இக்காலங்களில் மேற்காசியாவில் ரோமர்களும் கிரேக்கர்களும் ஆங்காங்கே ஆண்டுகொண்டிருந்தனர்

கனிஷ்கர் மிக பெரிய புத்த அபிமானி என்றாலும் இந்துமதத்தை அவன் வெறுக்கவில்லை வெறுத்தால் அது தன் ஆட்சிக்கு வீழ்ச்சியாகும் என கருதினான், ஆப்கானின் பிரமாண்ட புத்தசிலைகள் இன்னும் பல அவன் அமைத்தாலும் இந்துமதத்துகுரிய மரியாதையினை கொடுத்திருந்தான்

பின்னாளில் அவனின் வாரிசுகள் இந்துமதம் புத்தமதம் என மாறி மாறி வந்தாலும் கடைசியில் பவுத்தம் வென்றது, அந்நேரம் அரசு மறுபடி சீரழிந்தது

மேற்காசியாவில் இருந்து ஆப்கனில் இருந்தும் மறுபடியும் எதிரிகள் கூடினார்கள், வருடம் கிபி 350 முதல் 400ஐ எட்டிற்று

இம்முறை அவர்கள் பலம் அதிகமாய் இருந்தது, ஆங்காங்கே கிறிஸ்தவமும் பரவிகொண்டிருந்தது, பெரும் பாய்ச்சலாக அவர்கள் இந்தியாவுக்குள் நுழையவரும்பொழ்து அதே உஜ்ஜைனி காளி இன்னொரு வீரனை உருவாக்கினாள்

அவன் இரண்டாம் சந்திரகுப்தன்

அவனின் எழுச்சி மிக பெரிதாய் இருந்தது , காளியின் அருளால் வெற்றிமேல் வெற்றிபெற்ற அவன் குப்த அரசு எனும் பிரமாண்ட இந்து அரசை தோற்றுவித்தான், அவன் முன்னால் நிற்கமுடியாமல் எதிரிகள் ஓடிமறைந்தனர்

அவன் பெரும் தீர்க்கதரிசியாகவும் இருந்தான், வட நாடு முழுக்க அவன் கட்டுபாட்டில் இருக்க தென்னிந்தியா பக்கம் கடல்வழியாக எதிரிகள் வந்துவிட கூடாது என தக்காணத்தையும் தன் கட்டுபாட்டில் கொண்டுவந்தான் ஆனால் தென்னக மன்னர்களை அவன் அடிமையாக நடத்தவில்லை மாறாக அந்நியர் வராதவண்ணம் பார்த்து கொண்டான்

இந்த இரண்டாம் விக்ரமாதித்தன் காலமே காளிதாசன் இருந்த காலம் என்கின்றார்கள்,

அவன் மிகபெரும் பலமாய் இந்தியாவினை ஆண்டான் குபதர்க்ள் காலம் இந்தியாவின் பொற்காலம் எனும் பெரு நிலைக்கு ஆக்கிவைத்தான்

இப்படி அன்னை காளியின் அருளால் இரு விக்கிரமாதித்தன்கள் உருவாகி நாட்டை காத்தார்கள், அந்நியரை புகவிடாமல் அடித்து இந்துமதமும் அதன் கலாச்சாரமும் அழியாமல் காத்தார்கள்

இந்த இருவரால்தான் சுமார் 600 ஆண்டுகள் இந்தியா காக்கபட்டது, இருவரும் கொடுத்த அடிதளம் அப்படி. அதனில்தான் இந்துக்களுக்கு ஒரு நம்பிக்கையும் காவலும் இருந்தது, அன்னை உஜ்ஜைனி காளியின் அருள் அப்படி

அவளே இந்த வீரர்களை உருவாக்கி இந்த இந்து பூமியினை காத்து கொண்டாள், இந்த இருவரும் இல்லையென்றால் இந்நேரம் இந்தியா திபெத், தாய்லாந்து, பர்மா போல முழு புத்தநாடாக இருந்திருக்கலாம் அந்நிலை முகமதியவர் வரும் வரையாவது நீடித்திருக்கலாம்

விக்கிரமாதித்தன் பெயர் வரலாற்றில் ஏன் நிலைத்திருக்கின்றது என்பதும், இன்றும் இந்தியாவின் பாதுகாப்பு கப்பல்களுக்கு அவன் பெயர் ஏன் சூட்டபடுகின்றது என்பதும் சாதாரணம் அல்ல, அவர்கள் செய்த சாதனையும் கொடுத்த எழுச்சியும் அப்படி

குப்தர்காலம் ஓயும்பொழுது இன்னொரு புது எதிரி மத்திய ஆசியாவில் உருவானார்கள் அவர்கள் பெயர் ஹூனர்கர்கள்

கிரேக்கர், சாகர்கள் இன்னும் பலர் முயன்ற அதேவழியில் சாகர்கள் இந்தியாவில் புகுந்தார்கள், மேற்கு பகுதிகள் அவர்கள் வசமாயிற்று

அலெக்ஸாண்டர் வந்தால் சந்திரகுப்தன் வருவான், சாகர் முரட்டு கூட்டம் வந்தால் விக்கிரமாதித்தன் வருவான் அப்படி ஹூணர்கள் வந்தபொழுது கன்னோசி பகுதியில் ஒருவன் உருவானான், அவன் வயது வெறும் 17

காலம் கிபி 600ஐ எட்டி இருந்தது, இந்துக்களுக்கும் இந்து தேசத்துக்கும் இடைவிடாத தொந்தரவுகள் அதன் செல்வத்தை முன்னிட்டு வந்தன‌

இந்துமதம் எனும் வாழ்வியல் முறை இத்தேசத்தை அட்சயபாத்திரமாக வைத்திருந்தது, எவ்வளவு படையெடுப்பு வந்தாலும் அந்த இந்து வாழ்வியல் முறை தேசத்தை மறுபடி மறுபடி எழவைத்தது

ஆம், அலெக்ஸ்டாண்டருக்கு பின் கிரேக்கம் இல்லை, சீசருக்கு பின் ரோம் இல்லை , செங்கிஸ்கானுக்கு பின் பெரும் அரசு நிலைக்கவில்லை அத்தேசங்கள் வறுமையில் சிக்கின‌

ஆனால் இந்துமத இந்தியா எவ்வளவு அழிவினை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்தது, அதன் இந்துமத அடிப்படை வாழ்வும் அது கொடுத்த செல்வமுமே காரணம்

அதுதான் அலெக்ஸாண்டருக்கு பின் 600 ஆண்டுகள் கழித்தும் அந்நியரை தேசத்துக்குள் வர துடிக்கவைத்தது

கிரேக்கர்கள், சாகர்களை தொடர்ந்து ஹூணர்கள் வரும்பொழுது அந்த வீரன் எழுந்தான், இந்துமதம் அவனை எழுப்பிற்று, அவன் ஹர்ஷர் எனும் இந்துமன்னன்

அவன் பவுத்தம் என்பதெல்லாம் வரலாற்று திரிபு, 17 வயதிலே பெரும் வீரம் காட்டிய அவன் ஹூணர்களை எதிர்த்து இந்துவாக களம் கண்டான்

(தொடரும்)