ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 02

“உண்டில்லை யென்று முணர்வை யறிந்தக்கால்
கண்டில்லை யாகுஞ் சிவம்”

இக்குறள் “உண்டு இல்லை என்று உணர்வை அறிந்தக்கால் கண்டு இல்லை யாகும் சிவம்”

சிவம் உண்டு என நம்புவோர்க்கு சிவம் உண்டு

அதாவது தெய்வம் உண்டு என்பதையும் அது நம்மில் குடிகொண்டுள்ளது என்பதையும் ஒருவன் உணர்ந்துகொள்ள அறிவு வேண்டும், அந்த அறிவினாலே புத்தி தெளியும் புத்தி தெளிந்தால் ஞானம் பெருகும், ஞானம் பெருகினால் சிவனை காணலாம் என்பது பொருள்

நாத்திக கொள்கை என்பது இன்று அரசியலுக்கும் தேசவிரோதத்துக்கு மட்டும் உருவானது அல்ல, அது எக்காலமும் இங்கு இருந்தது

அதைத்தான் நம்புவோர்க்கு சிவம் உண்டு, அந்த சிவனை உணர அறிவு வேண்டும் என்றார் ஒளவையார்

இதனையே திருமூலரும் பாடுகின்றார்

““உண்டில்லை யென்னும் உலகத் தியல்வது
பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானிடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை யுள்ளே விளக்கொளி யாகுமே.””

இந்த பொருளைத்தான் பாடலாக வைத்தார் கண்ணதாசன்

“தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை”

இங்கே இல்லை என்பது தெய்வம் இல்லை என்பவனுக்கு அறிவே இல்லை, புத்தியே இல்லை என பொருள்படும்