குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 50
“உலையா முயற்சி களைகணா வூழின்
வலிசிந்தும் வன்மையு முண்டே – உலகறியப்
பான்முளை தின்று மறலி யுயிர்குடித்த
கான்முளையே போலுங் கரி.
இப்பாடல் “இடைவிடாத முயற்சி களை காணா ஊழின் வலிசிந்தும் வன்மையும் உண்டே உலகறிய பான் முளை தின்று மறலி உயிர்குடித்த கான் முளையே போலுங் கரி” என பொருள்தரும்
அதாவது இடைவிடா முயற்சி, எந்நிலையிலும் தளராத முயற்சி செய்தால் ஊழ் வினையின் வலிமையினை போக்கலாம் என்பதை உணர்ந்த வேண்டும், மார்கண்டேயன் ஊழ்படி அவன் எமனிடம் சிக்க வேண்டும் ஆனால் அவன் சிவனை பற்றி தன்னை காத்துகொண்டான் அதாவது
கரி என்றால் சாட்சி
விதியினை கடுமையாக போராடி வெல்லலாம் என்பதற்கு மார்கண்டேயனே சாட்சி என்கின்றார் குமரகுருபரர்
இதைத்தான் ஊக்கமுடைமை என்றும், “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும்” என வள்ளுவனும் தன் பாடலில் சொல்லிவைத்தான்