50 வருஷம் இழுக்கலாம்
“ராமர் கோவில் இன்னும் கட்டவில்லை, கட்டவும் முடியாது, ஆனா ஏதாவது செய்யாமல் தேர்தல் பக்கமும் செல்ல முடியாது
அதாங்க சொல்றேன், முதல்ல மசூதி இருந்த இடத்துக்கு அப்பால அனுமாருக்கு ஒரு சின்ன கோவில் கட்டுவோம், அப்படியே விஸ்வாமித்திரர்க்கு ஒன்னு கட்டுவோம்
10 வருஷம் அத சொல்லியே அரசியல் செய்யலாம், அப்புறமா கைகேயி கூனிக்கு சிலை வச்சி கல் எறிய சொல்லுவோம், ஆத்தங்கரையில குகனுக்கு படகு கோவில் கட்டுவோம், லட்சுமணனுக்கு நடுகாட்டுக்குள்ள கட்டுவோம்
அப்படியே 50 வருஷம் இழுக்கலாம்
ராமருக்கு கோவில்னு இழுத்தமாதிரியும் ஆச்சி, ராமயணத்தாருக்கு எல்லாம் கோவில் கட்டுனமாதிரியும் ஆயிரும் “