6 வருட அதிமுக ஆட்சியில் உண்மையில் பெரும் செல்வம் அரசுக்கு கொட்டியிருக்கின்றது.

6 வருட அதிமுக ஆட்சியில் உண்மையில் பெரும் செல்வம் அரசுக்கு கொட்டியிருக்கின்றது.

இல்லாவிட்டால் இவ்வளவு செலவு செய்ய வாய்ப்பே இல்லை.

அப்பல்லோ செலவு என்ன? லண்டன் டாக்டர் சம்பளம் என்ன? போன்ற கணக்குகளே இன்னும் வரவில்லை.

அதற்குள் எம்.எல்.ஏக்களுக்கு 1 லட்சம் சம்பள உயர்வு, அவர்களுக்கு நவீன கார்கள் என அள்ளி கொடுக்கின்றது அரசு

ஜெயலலிதாவிற்கு பல கோடி செலவில் மண்டபமாம்

இப்பொழுது 47,000 ரூபாய் மதிப்புள்ள வாக்கி டாக்கியினை 2 லட்சம் கொடுத்து அரசு வாங்கி காவலர்களுக்கு கொடுத்திருக்கின்றதாம்

எவ்வளவு பணம் கொட்டி கிடந்தால் இப்படி வாங்க முடியும்?

இன்னும் எவனாவது தமிழ்நாடு ஏழை மாநிலம், டெங்கு ஒழிக்க பணமில்லை, குடிநீர் கொடுக்கவில்லை, சாலை சரியில்லை என சொன்னால் உலகம் எப்படி நம்பும்?

பார்த்தீற்களா? தமிழகத்தை எப்படி பணக்கார மாநிலமாக மாற்றிவிட்டார்கள் இந்த பழனிச்சாமி கோஷ்டி.

இன்னும் என்னென்ன பொருளை அதிக விலை கொடுத்து வாங்கி தங்கள் அரசின் செல்வ செழிப்பினை அரசு காட்டியிருக்கின்றதோ தெரியவில்லை

வாக்கி டாக்கிக்கே 2 லட்சம் என்றால், நிச்சயம் இனி போலிஸ் கையில் ஏகே 47, ஏகே 56 என என்னெவெல்லாம் வரும் தெரியுமா?

ஹாலிவுட் படங்களில் வரும் அதிரடி போலிசை போல தமிழ்நாட்டு போலிசை மாற்றிகொண்டிருக்கின்றது தமிழக அரசு

அதன் முதல் கட்டம்தான் 2 லட்சம் செலவில் வாக்கிடாக்கி. அதில் சென்னை முதல் நியூயார்க் வரை வாக்கிடாக்கியிலே பேசலாம், ஒரு குற்றவாளியும் தப்ப முடியாது.

இது புரியாமல் அரசு ஊழல் செய்கின்றது என திட்டிகொண்டிருக்கின்றார்கள்.