காமராஜரையும், கக்கனையும் சீண்டாதீர்கள்
காமராஜர் நல்லாட்சிதான் வழங்கினார் சந்தேகமில்லை, ஆனால் அவர் தோற்றதில் உள்கட்சி தகறாறுகளும் இருந்தன.
இந்நிலையில்தான் திமுகவிடம் ஆட்சி சிக்கியது, அது பெரும்பாலும் சமூக விஷயங்களை பேசிகொண்டிருந்த இயக்கம், கூடுதலாக தமிழுக்கு மட்டும் போராடிகொண்டிருந்தது
அண்ணாவிடம் ஆட்சி இருந்தது 1.5 ஆண்டுகள், பெரும் குறை சொல்லமுடியாது, பண்பான ஆட்சியினை தொடர்ந்துகொண்டுதான் இருந்தார்
அவர் மறைந்த பின் உண்மையான திமுக ஆண்டது 3 ஆண்டுகள்தான், மிக தீவிரமாக அது ஆண்டது, அதில் பல நல்ல விஷயங்களும் நடந்தன, மதுகடை தவிர. அதுவும் அதனை விரைவில் மூடிவிடும் திட்டம்தான் திமுகவிற்கு அன்று இருந்தது.
என்று ம.கோ.ராமசந்திரன் தனியாக கிளம்பினாரோ அன்று பிடித்தது தமிழக சனி
கொள்கை ரீதியான திமுக, இந்த சனியனை சமாளிக்கவே பெரும்பாடுபட்டது, அதன் கவனமெல்லாம அதிலே சென்றது. அவரோ அப்படியே டெல்லியின் எடுபிடியானார்.
திமுகவிற்கான தொந்தரவுகள் அவர் மூலமே நடந்தன..
பின் ஆட்சியும் மகோ ராமசந்திரனிடம் சிக்கியது, 10 ஆண்டுகள் அவரின் அரசாட்சி, அது முடியும் தருவாயில் இன்னொரு சனியனை உருவாக்கிவிட்டும் சென்றுவிட்டது
ஆக எதனையோ எதிர்க்க கிளம்பிய திமுக, தன் சொந்த சனியனை எதிர்பதிலே முழு காலத்தையும் கழித்தாயிற்று
மக்கள் பணத்தில் கட்டபட்ட சட்டசபை கட்டடத்தை கூட திறக்கமாட்டோம் என அடம்பிடிக்கும் கட்சியினை வைத்துகொண்டு என்ன செய்வது?
தமிழகத்தை குட்டிசுவராக்கிய பெரும் பங்கு அந்த கட்சியினுடையது..
அவரை அவர் பாணியிலே எதிர்க்கின்றேன் என அரசியல் செய்த திமுகவும் பல இடங்களில் தடுமாறிற்று.
உடன்பிறந்த வியாதி என்பது நிச்சயம் அந்த ” மகோ ராமசந்திரனே..”
ஆக யாராவது தமிழகத்தை கெடுத்தது யார்? என கேட்டால் அந்த ம.கோ ராமசந்திரனை கைகாட்டுங்கள், அவரின் வாரிசுகளை கை காட்டுங்கள்
தானும் ஓழுங்காக ஆளாமல் , தன் வாரிசினையும் உருப்படியாக அறிவிக்காமல், எதிர்கட்சிக்கும் வாய்ப்புகொடுக்காமல் இந்த தமிழநாட்டை முழு சீர்கேடாக ஆக்க்கியது அந்த குல்லா மண்டையனே
அவரை எவ்வளவும் திட்டுங்கள், விமர்சியுங்கள். அதில் அர்த்தம் உண்டு
அதனை விட்டுவிட்டு காமராஜரையும், கக்கனையும் சீண்டாதீர்கள்
திமுக நிச்சயம் மாற்றம் நோக்கி புறப்பட்ட கட்சிதான், ஆனால் மகோ ராமசந்திரன் எனும் தீரா தலைவலியினை அவர்கள்தான் உருவாக்கிவிட்டார்கள்
அந்த விபத்து நடந்திருக்க கூடாது
ஆக எதிர்பாராமல் கிளம்பி தமிழகத்தை கெடுத்த அந்த மகோராவினை இந்த “திராவிடம் 50ல்” சாடுங்கள்….
திராவிடம் உருவாக்கிய அந்த உள்வீட்டு குட்டிசாத்தானை சாடுங்கள், திராவிட எதிரிகளிடம் விலைபோன அந்த கோடாரி காம்பினை திட்டுங்கள்..
பரிதாபமான காமராஜரையும், கக்கனையும் விட்டுவிடுங்கள்…