திரு.மைக்கேல் பிரான்ச் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

வள்ளியூரின் பண்பாளர்களில் ஒருவரும், பழகுவதற்கு இனிமையானவரும், மக்களின் நன்மதிப்பினை பெற்றிருந்தவருமான திரு.மைக்கேல் பிரான்ச் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றோம்.

மறக்கமுடியாத மனிதர் ஒருவர் மறைந்திருக்கினார்

வள்ளியூர் தன் பண்பான மைந்தனை இழந்திருக்கின்றது, பாத்திமா ஆலயம் தன் பெரும் பக்தனை இழந்திருகின்றது

அவரின் குடும்பம் தன் வேரினை இழந்திருகின்றது

ஆசிரியை சரோஜா அவர்களின் கரங்களை பற்றிகொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம், அண்ணன் அறிவரசு அவர்களுக்கும் நம் கண்ணீரை தெரிவித்துகொள்வோம்

அவர் தினமும் வழிபட்ட பாத்திமா அன்னை அவரின் ஆன்மாவிற்கு நித்திய இளைபாற்றியினை அருளட்டும்