தமிழ் அழிகின்றதாம்.. பலர் தார்சட்டி தூக்கியாயிற்று…

17522776_10208807527280624_3823771894950440676_n.jpg

மைல் என்பது தமிழ்சொல்லா? என்பதெல்லாம் பற்றி கூட யோசிப்பதில்லை.

தமிழை வடமொழி கலப்பில் இருந்து விடுவிக்க வந்தவர்களின் அந்த காலகட்டம் நன்றாகத்தான் இருந்தது, திமுக மட்டும் அல்ல, மறைமலை அடிகளின் தனித்தமிழ் கழகம், ம.பொ.சியின் தமிழரசு கழகம் போல திமுகவும் அந்நாளில் தமிழை காப்பாற்றத்தான் செய்தது

சமஸ்கிருதம் கலந்திருந்த தமிழை மிக சுத்தமாக்கி, பல தமிழ்பெயர்களை அவர்கள் தமிழ்படுத்தினார்கள், அப்படியே இந்தி எதிர்த்தார்கள், பெரும் போர் நடத்தினார்கள், அப்படியே ஆட்சிக்கும் வந்தார்கள்

அண்ணா இருக்கும் வரை பல தமிழ்புரட்சிகள் நடக்கத்தான் செய்தன, காட்சிகள் அதன் பின் மாறின‌

இந்தியினைத்தான் எதிப்போம், ஆங்கிலம் இருக்கட்டும் என விட்டுவிட்டார்கள், அது எல்லா இடத்திலும் வளர்ந்தது

சினிமாவில் வளர்ந்தது, கடை தெருவில் வளர்ந்த்து, கல்வியில் வளர்ந்தது, தனியார் கல்வி நிலையங்கள் வந்தபின் இன்னும் மோசம்

1975க்கு பின் நிலமை இன்னும் மோசமாயிற்று, திமுக வழிவந்த அந்த முதல்வரின் பெயரே எம்.ஜி.ஆர் , ஆம் ஆங்கிலம், இதற்கு மேல் என்ன சொல்ல?

ஆக தமிழ் மறைந்தது, கடைகள் முதல் கல்வி வரை தமிழ் ஒழிந்தது, சினிமா பாடல்கள் ஆங்கிலத்தில் பூத்தது, சினிமா நட்சத்திரங்கள் “ஸ்டார்” அதற்கு முன் ஆங்கில அடைமொழியில் அழைக்கபட்டனர்

ஆக தமிழை காப்போம் என்பவர்கள் தார் சட்டி தூக்க தொடங்கினால் , ஒரு சட்டி போதாது கப்பல் கப்பலாக வேண்டும்

அப்படி கடைகள் பெயர் ஆங்கிலத்தில் , போக்குவரத்து வாகனங்கள் ஆங்கிலத்தில், கல்வி நிலையம் ஆங்கிலம், கல்வி முறை ஆங்கிலம்

எல்ல்லாமே ஆங்கிலம், அல்லது தமிழும் ஆங்கிலமும் கலந்த வித்தியாசமான மொழி

தமிழ் தொலைகாட்சிகளில் வருதெல்லாம் ஆங்கிலம், நடன போட்டி நடுவர் கோரியாகிராபி என தொடங்குவதிலிருந்து, இந்த ஸ்டெப்,, அந்த மூவ்மென்ட் என சகலமும் ஆங்கிலம்.

அதுவும் அவை கலைஞர் டிவி, சன் டிவி என பார்க்கும்பொழுது அந்த தார்சட்டி காட்சிகளும், 64 பேர் செத்தது அர்த்தமில்லாமல் போனதும் நினைவுக்கு வந்துதான் தொலைகின்றன‌

இவர்கள் முகத்தில் தார் பூசுவது யார்?

நிச்சயமாக சொல்லலாம், தமிழை காக்க கிளம்பிய திமுகவின் தொடக்க காலம் நன்றாக இருந்தது, ஆட்சிக்கு வந்ததும் மாறிற்று

அது ஏன் இந்திமட்டும் எதிர்க்கவேண்டும்? ஆங்கிலம் தமிழை அழித்தால் பிரச்சினை இல்லையா?

இன்று தார்சட்டி தூக்குபவர்கள் பூசவேண்டுமானால், முதலில் ஸ்டோர்ஸ், டெக்ஸ்டைல்ஸ், சிக்கன் ஸ்டால், ரெஸ்டாரண்ட், ஹோட்டல் என கடை வீதிகளில், ஆட்டோ, பஸ், லாரி வாகன நிலையங்கள் என பூசவேண்டியது எவ்வளவோ உண்டு

மெட்ரிகுலேஷன், பிரைமரி ஸ்கூல், இன்ஞ்னியரிங் காலேஜ் என அடுத்த வரிசை உண்டு, இன்னும் ஏராளம் உண்டு

வித்தியாலயா, கேந்திராலயா என்பதெல்லாம் என்ன வள்ளுவன் சொன்ன பெயர்களா?

எல்லா பள்ளிகளிலும் கட்டாயம் தமிழ் உண்டு, தமிழில் தேர்ச்சிபெறாமல் பட்டம் இல்லை என சொல்ல இவர்கள் எதனை பூசுவார்கள்?

இதனை எல்லாம் சொல்லி அவர்கள் முகத்தில்தான் நியாயபடி தார் பூச வேண்டும்

30 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட முதல்வரின் கல்லறை எம்.ஜி.ஆர் கல்லறை என ஆங்கிலத்தில் இருக்கின்றது, இந்த வைகோ அதில் தார் பூச தயாரா?

ராஜ் பவனில் தார் பூச தயாரா?

கடை வீதிகளில், கல்வி நிலையங்களில், சினிமாக்களில் தார் பூச தயரா? இல்லை

மாறாக மைல் கல்லில் பூச கிளம்பிவிட்டார்கள்

மைல் என்பது தமிழ் சொல்லா? அதற்கு தமிழ்பெயர் இல்லையா? இல்லை என்றால் உருவாக்க கூடாதா?

பிரியாணி, பரோட்டா என்பதற்கு கூட தமிழ் பெயர் சொல்ல யாருமில்லை, அப்படி இந்திபெயர்கள் புழங்கலாம் ஆனால் இந்தி மட்டும் வந்துவிட கூடாதாம்..

பிரதமர், மந்திரி என வடமொழி வார்த்தைகள் எல்லாம் தமிழா? சிலப்பதிகாரம் அப்படியா சொல்கின்றது?

அதாவது இந்தியில் எழுதினால் தவறாம், திணிப்பாம். இந்தியினை தமிழில் எழுதினால் பிரச்சினை இல்லையாம்.

இது பற்றி எல்லாம் சொன்னால் எந்த மொழியும் வந்து தமிழை அழிக்கட்டும், இந்தி மட்டும் வரகூடாது என்பார்கள்

இது அரசியல் , முழுக்க உணர்ச்சி தூண்டும் அரசியல் அன்றி வேறல்ல, அது இனி எடுபட போவதுமில்ல்லை

தமிழை காக்க ஆயிரம் வழிகள் உண்டு, அப்படி காக்க கிளம்பட்டும், வாழ்த்தலாம்

இந்திக்கு தார் பூசுவதும், ஈழம் வாழ்க, புலிகள் வாழ்க, பிரபாகரன் வாழ்க என்பதெல்லாம் தமிழ் உணர்வு ஆகாது, தமிழை வளர்க்கவும் முடியாது

தார் பூசும் வைகோ பேசும்பொழுதெல்லாம் சொல்வது டெல்லி சர்க்கார்……, சர்க்கார் என்பது தொல்காப்பியன் வார்த்தையா?

சொன்னால் சொல்லிகொண்டே இருக்கலாம், அவர்கள் அப்படித்தான், எப்படியும் போகட்டும்

நாமாவது இனி தமிழ்வார்த்தைகளை உருவாக்க வேண்டியதுதான்

17553396_10208807537360876_7585157085219364550_n.jpgகுஷ்பூ எனும் உருது வார்த்தையின் தமிழாக்கம் என்ன என்பதிலிருந்து ஆராய்ச்சி தொடங்கலாம்

குஷ் என்றால் சிறந்த, உயர்ந்த‌ என்பதும், பூ என்றால் தன்மை என்பதும் குணம் என்பதுமாக அர்த்தம் வருகின்றது

ஆக குஷ்பூ என்றால் உயர்ந்த குணம் தன்மை, என்பது போல அர்த்தம் வருகின்றது, அது அழகிற்கும் பொருந்தும்

நல்ல அழகான பெண் என அர்த்தம் வரும் போலிருக்கின்றது, கொஞ்சம் நீளமாக இருக்கின்றது

அழகி என சொல்லலாம் தமிழை கொச்சைமொழியாக்கிய தினதந்தி நினைவுக்கு வந்து தொலைக்கின்றது, தமிழை மிக மட்டமான மொழியாக்கியதில் நிச்சயம் தினதந்திக்கு பங்கு உண்டு என்பது “சதக் சதக்” என நெஞ்சில் இறங்கும் உண்மை

பின் குஷ்பூவிற்கு தமிழ்பெயர் என்ன?

“உச்ச அழகு அல்லது அழகின் உச்சம் அல்லது அழகின் சிகரம்” எனும் என தமிழ்படுத்தலாம்

ஆக குஷ்பூ எனும் பெயரின் தமிழாக்கம் “அழகின் உச்சம்”.

தமிழுக்கு பெரும் தொண்டாற்றிய நிறைவு வருகின்றது, இதனை விட யார் தமிழுக்கு இப்போதைக்கு உழைக்க முடியும்?

அதனால் தார்சட்டி தூக்கும் அவசியம் நமக்கு இல்லை.