அக்‌ஷரா ஹாசன் படத்திற்கு எதிராக விசுவ இந்து பரிஷத் போராட்டம்

திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாகும் இளம்பெண்ணை பற்றிய படத்தில் அக்‌ஷரா ஹாசன் : படத்திற்கு எதிராக விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம்

கஸ்தூரி ராஜா, செல்வராகவன் போன்றோரின் “கருத்தாழமிக்க” படங்கள், சிந்துசமவெளி, உயிர் போன்ற “சமூக அக்கறை” படங்கள் வரும்பொழுதெல்லாம் இவர்கள் கோவில் கருவறை பூஜையிலும், உழவாரபணியிலும் இருக்கின்றார்கள்

கமலஹாசன் அல்லது அவர் மகள் படமென்றால் மட்டும் அந்த திருப்பணிகளை அப்படியே போட்டு விட்டு வெகுண்டெழுந்து போராட‌ வருகின்றார்கள்

விஸ்வ ஹிந்து அல்ல, விசித்திரமான ஹிந்து பரிஷத் இது..