இந்தியாவில் இனவெறி இல்லையாம் ….
இந்தியாவில் இனவெறி இல்லையாம், தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து ஒரு வடக்கு எம்பி சொல்லியிருப்பது உலக நாடுகளில் எதிரொலிக்கின்றது
என்னிடமும் ஒருவர் சொன்னார், பார்த்தீர்களா உங்கள் நாட்டில் இனவெறி இல்லை என அமைச்சர் சொல்கின்றார், பெரும்தன்மையான நாடு , நல்லது, இந்தியா அப்படித்தான் இயங்குகின்றது என்றார்
“ஆம், தமிழிசை, பொன்னார் போன்றவர்களை காணும் வடக்கத்தி பிஜேபிகாரர்கள் அப்படித்தான் சொல்வார்கள்
ஆனால் நாங்களும் பெருந்தன்மையாக அந்த நிறமானவர்கள் மீது எந்த வெறுப்போ , வன்மமோ காட்டுவதில்லை, அதற்கு அவசியமும் இல்லை, அந்த பெருந்தன்மையிலும் இந்தியா இயங்குகின்றது என சொல்லலாம் அல்லவா?..” என்றேன்
யோசிக்க வேண்டிய விஷயம் என சொல்லிவிட்டார்
இவர் என்ன யோசிப்பது?
அன்றே பெரியார் வெள்ளைக்காரனிடம் சொன்னார் “இந்நாட்டை இந்தியா பாகிஸ்தான் என பிரிக்காதீர்கள், வட இந்தியா தென் இந்தியா என பிரியுங்கள்..
இவர்கள் எப்படியானவர்கள் என்பது பின்னொரு காலத்தில் தெரியவரும், அன்று நீங்கள் இங்கு இருக்கமாட்டீர்கள்., அன்று நாங்கள் நியாத்தை யாரிடம் கேட்போம்?”
ஒரு வழியாக பெரியாருக்கு உயிர்கொடுக்கும் காரியத்தில் பாதி வெற்றிபெற்றிருக்கின்றது அந்த பரிவாரங்கள். விரைவில் பெரியார் உயிரோடு வந்தாலும் ஆச்சரியமில்லை…