சரத்குமார் வீட்டில் சோதனை… பிரேமலதாவின் இந்தி வரவேற்பு : என்னமோ நடக்குது ….
சரத்குமார் வீட்டில் சோதனை நடக்கும்பொழுது பிரேமலதாவின் இந்தி வரவேற்பும் இன்னபிற சிகப்பு கம்பள விரிப்பும் அக்கட்சியினை சந்தேகமாக பார்க்க வைக்கின்றன
அதுவும் இத்தனை நாள் இல்லாமல் திடிரென அவர் டெல்லியில் மண்சோறு தின்றதும் விசித்திர காட்சிகள்
அம்மணி தமிழிசைக்கு தாய் போல பேசதொடங்கிவிட்டார்..
ஏதோ பாஜகவிற்கு சிக்னல் கொடுக்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது., அந்த கட்சிக்கும் ஒரு சசிகலா இருப்பது இறைவன் வகுத்த விதி என்றால் யாரால் மாற்ற இயலும்?
இன்னும் தேமுதிகவிற்கு எதிர்காலம் இருக்கின்றது என அவர் நம்பினால் அய்யோ பரிதாபம், இவரை நம்பி பாஜக எதுவும் செய்து தொலைத்தால் அது அதனை விட பரிதாபம்
பாஜக விஜயகாந்தினை பற்றி எப்படி முடிவெடுக்குமோ தெரியாது, ஒருவேளை அவரை அணைப்பது என முடிவெடுத்தால் என்னாகும்?
சிறையில் ஒருவர் எதற்கு இருக்கின்றார்? இன்னும் 4 நாளில் வெளிவந்துவிட்டால் விட்டுவிடுவாரா?
விஜயகாந்தினை ஓழிப்பது எப்படி என்பது அவருக்கு கை வந்த கலை, அவர் பார்த்துகொள்வார்…..