இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்
https://youtu.be/fmJtioTUuEA
இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்
26 வருடங்களுக்கு முன்னால் அந்த இதே நாளில் அந்த பிரசித்தி பெற்ற காவியம் உலகிற்கு தரபட்டது, தமிழகம் அதனால் பெரு மகிழ்ச்சி கொண்டது, கிட்டதட்ட 2 ஆண்டுகள் தமிழகம் அதனை திரும்ப திரும்ப கொண்டாடியது
சின்னதம்பி படம் 1991ல் வெளியான நாள் இன்று
நம்மையும், நம்மை போன்ற ரசிகர்களின் மனதையும் ஆட்கொண்ட குஷ்பூ அந்த படத்தின் நாயகி, அந்த படம் அவருக்காகவே ஓடியது, அதன் மூலம் எல்லார் மனதிலும் அவர் இடம்பிடித்தார், தமிழகத்தில் தனி இடம் பிடித்தார்
அவருக்காகவே அந்த படம் உலகமெல்லாம் வெற்றிபெற்றது , திரும்ப திரும்ப கூட்டம் கூடிற்று. தமிழக திரைபட வரலாற்றிலே அந்த படம் பெரு வெற்றியானது
எல்லா பெண்ணுக்கும் உச்ச அழகு முகத்தில் வெகு அபூர்வமாக தெரியும், குஷ்பூவிற்கு அவர் சின்னதம்பியில் உதட்டை குவித்து கண்கள் பளிச்சிட சிரிக்கும்பொழுது தெரிந்தது..உச்சபட்ச அழகு அது..
அதனால் இன்றுதான் “குஷ்பூ தினம்” என ரசிகர்களால் கொண்டாடபடுகின்றது..
சில நடிகைகள் சிரித்தாலே சகிக்காது, ஆனாலும் அழும்பொழுதும் அழகாக இருந்த ஒரே நடிகை குஷ்பூ, அழும்பொழுதும் அப்படி ஒரு கலை அவர் முகத்தில் இருந்தது
காளிதாசனின் சாகுந்தலை கூட அப்படி ஒரு அழகோடு இருந்திருக்க முடியாது..
இன்று அந்த படம் 100 நாள் ஓடிய சாந்தி தியேட்டர் இல்லை, நாயகனை காணவில்லை, பாடல் எழுதிய வாலி இல்லை, அந்த டைரக்டர் போராடிகொண்டிருகின்றார், இளையராஜா கூட அவுட்
ஆனால் 26 வருடமாக அசைக்கமுடியாத இடத்தில் இருக்கின்றார் குஷ்பூ, அப்படியே இருக்கின்றார்
ஆக இந்நாள் அவரின் ரசிகர்களுக்கு எல்லாம் பொன்னாள், கொண்டாட வேண்டிய நாள், அவரின் ரசிகர்கள் என்ன? உலகமே “குஷ்பூ டே”
கொண்டாடி கொண்டிருக்கின்றது
சின்னதம்பி படத்தினை 1001ம் முறையாக பார்த்து இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை கொண்டாட ரசிகர் பெருமக்களை அழைக்கின்றோம்..
சமீபத்தில் அவர் தெலுங்குபடத்தில் 10 வருடம் கழித்து நடிப்பதாக செய்திகள் வந்தன, அவர் இன்னும் பல இன்னிங்க்ஸ் நடிக்க வாழ்த்துவோம்
Happy Kushbu Day….