பேச்சு நடத்த அழைத்தால் நாங்கள் தயார் : பன்னீர் செல்வம்

என்னதான்  நடக்குது 

அதிமுக இரு அணிகள் இணைவது தொடர்பாக பேச்சு நடத்த அழைத்தால் நாங்கள் தயார் : பன்னீர் செல்வம்

பேச செல்லுங்கள் பன்னீர், ஆனால் அதற்கு முன்பு ஏதோ உங்களிடம் ரகசியம் இருப்பதாக அடிக்கடி சொன்னீர்கள் அல்லவா? அந்த ரகசியத்தை வெளியிட்டுவிட்டு செல்லுங்கள்

ரகசியத்துடன் அங்கு கலந்தீர்கள் என்றால், நீங்கள் “ரகசிய காப்பு பிரமாணம்” எடுத்துவிட்டே செல்கின்றீர்கள் என அர்த்தமாகும்

பின் நீங்களும் அந்த ரகசியகாப்பு கூட்டத்தில் ஒருவராக கருதபடுவீர்கள்…

அந்த ரகசிய காப்புடன் மக்களிடம் வந்தால் ஒரு வோட்டு வாங்குவீர்களா பன்னீர் செல்வம்???

ஆக நீங்கள் அடிக்கடி உங்களிடம் இருப்பதாக‌ சொல்லும் அந்த “அப்பல்லோ ரகசியத்தை” சொல்லிவிட்டு செல்லுங்கள் பன்னீர் செல்வம்