அங்கிள் சைமனின் எஜமான் பாசம்
தினகரன் கைதுக்குப் பின்னால் இருக்கும் மோடி அரசின் அதிகார அத்துமீறலைத் தோலுரிப்போம் : சீமான்
அதானே, இவருக்காவது கொஞ்சமாவது எஜமான் விசுவாசம் இருக்கின்றது, அந்த வைகோவிற்கு கொஞ்சமாவது இருக்கின்றதா?
வெளியில் வந்தால் இப்படி எல்லாம் பேசவேண்டும் என்பதற்காகத்தானே தேசதுரோகி பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை என சிறையிலே இருந்துவிட்டார், என்ன வஞ்சகம்?
அங்கிள் சைமனின் எஜமான் பாசம் பாராட்டதக்கது,
ஆனால் இதே சைமன் தான் முன்பு பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனைக்கு ஆதரவாக மும்பையில் பேசியவர் என்பது குறிப்பிடதக்கது
அதிமுகவில் நாஞ்சில் சம்பத் இருப்பது ஆச்சரியமல்ல, அதற்கு வெளியேயும் பல நாக்கில்லா சம்பத்கள் இருப்பதுதான் அதிமுகவின் சமார்த்தியம்..
கொசுறு
ஜெயலலிதா இருந்தபோதும் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன: தம்பிதுரை பேச்சு
கருத்து வேறுபாடுகள் மட்டுமல்ல, அன்று இவர் வாயில் பிளாஸ்திரியும் கழுத்துக்கு பின்னால் கத்தியும் இருந்தது, அதனை சொல்ல மறந்துவிட்டார்