வடகொரியாவில் எப்போது தீபாவளி தொடங்கும்
ஈரானும் வடகொரியாவும் ரகசிய தொடர்பில் உள்ளது : அமெரிக்கா அறிக்கை.
வடகொரியாவினை அடிக்க தயாராகும் பொழுதே ஈரானை இழுத்துவிட்டு தொடங்குவதன் பெயர்தான் ராஜதந்திரம். ஆனால் வடகொரியா பாகிஸ்தானோடும் கொஞ்சம் தொடர்பில் உள்ள நாடு, அதையும் மறைப்பதன் பெயர்தான் இன்னொரு ராஜதந்திரம்
இவர்கள் இப்படி ராஜதந்திரமாக சொல்லிகொண்டிருக்க, என்னை விஷவாயு குண்டு வீசி கொல்ல அமெரிக்கா சதி என முந்திகொண்டு ராஜதந்திர நகர்வு எடுக்கின்றார் வட கொரிய அதிபர் கிம்
இந்த ராஜதந்திரங்கள் எல்லாம் எதில் முடியபோகின்றதோ தெரியவில்லை. எல்லா தந்திரங்களும் ஜெயிப்பதில்லை..
வடகொரியாவில் எப்போது தீபாவளி தொடங்கும் என உலகம் திக்திக்கென்று இருக்கும் வேளையில், பாகிஸ்தானின் அத்து மீறலை தொடர்ந்து இந்திய விமானபடை தயாராகியிருக்கும் வேளையில் வந்த அந்த செய்தி உலகை அதிர செய்தது
சீன கடற்படை கப்பல் கன்னியாகுமரி அருகே ஊடுருவிவிட்டது என்றும், இந்திய கடல்படை துப்பாக்கி சூடு நடத்தியது என்றும் செய்திகள் வந்தவுடன் உலகமே ஆடிபோயிற்று
காரணம் அது ஒரு போருக்கான அறிகுறி, சீன கப்பலை இந்தியா துணிந்து அடிக்கின்றது என்றால் அது யுத்த தொடக்கம் என்பது உறுதி, உலகம் ஒருநிமிடம் உறைந்து பின் காரணம் தெரிந்து நிம்மதியாயிற்று
அதாவது என்னதான் சீனா நம் எதிரிநாடு என்றாலும் சில ஒப்பந்தங்கள் உண்டு, அது உலக நடைமுறை
அப்படி இந்தியாவின் கோவாவிற்கு வந்த சீன கப்பல் குறுக்கு வழியில் கன்னியாகுமரி பக்கம் ஊடுருவிற்று, சிக்னல்கள் குளறுபடியால் இந்திய கப்பல்களுக்கு உண்மை விளங்கவில்லை, தங்கள் கடமையினை சுட்டு விரட்டி செய்தார்கள் என்கின்றது வெளிநாட்டு செய்திகள்
இந்திய கப்பல்படை தரப்பில் இன்னும் தகவல் இல்லை
இதில் ஒரு விஷயம் கவனிக்கதக்கது
அதாவது வெளிநாட்டு கடற்படை எல்லை கடந்தவுடன் இந்திய கடற்படை எப்படி துடித்தெழுகின்றது பார்த்தீர்களா? சல்யூட்
இப்படிபட்ட துடிப்பான கடற்படை ஏன் தமிழக மீணவர் விவகாரத்தில் அமைதிகாக்கின்றது, அதுதான் அரசியல். மீணவர் பிரச்சினையின் தன்மை வேறுமாதிரியான அரசியல்
அந்த அரசியல் தலையீடு மட்டும் இல்லையென்றால் நம் கம்பீர கடற்படை எந்த விட்டுகொடுக்கும் போக்கிற்கு செல்லாது என்பதே இன்றைய சீன கப்பல் மீதான துப்பாக்கி சூடு சொல்லும் செய்தி
வந்தே மாதரம்….