கூடங்குளம் : ஓர் சரித்திர குறிப்பு…
கூடங்குளம் அணுவுலை என சொன்னால் அது 1989ல் கலைஞர் அனுமதித்தது என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், வியாதி அப்படி,
மருந்தே இல்லாத வியாதி
தமிழகத்தில் முதல் அணுவுலையினை கல்பாக்கத்தில் அனுமதித்தது முகராசன் எம்ஜி.ராமசந்திரன், இந்திரா சொன்னால் பாகுபலி சத்யராஜ் போல ஆகட்டும் தாயே என விழுந்துகிடந்தவர் அவர், அவர்தான் அனுமதித்தார்
அதன் பின் கூடங்குள திட்டம் எம்ஜிஆர் அந்திமகாலத்தில் தொடங்கபட்டது, அவர் தடையேதும் சொல்லவில்லை,
எம்ஜிஆர் எனும் கட்டப்பாவிற்கு இந்திரா சிவகாமி என்றால், ராஜிவ்காந்தி அமரேந்திர பாகுபலி, அப்படி இருந்தது அவரின் டெல்லி விசுவாசம்..
அதன்பின் கலைஞர் முதல்வரானது கொஞ்சகாலமே, அதுவும் ஜெயா ராஜிவின் கூட்டணியால் அபாண்டமாக கலைக்கபட்டது, கலைஞர் மூச்சு விட கூட அவகாசமின்றி அது கலைக்கபட்டது
1993ல் கூடங்குளம் மறுபடி கட்டபட்டபொழுது ஜெயாதான் முதல்வர், 2011ல் அது இயங்கும் பொழுதும் அதிமுக ஆட்சிதான், இடிந்தகரை மக்களை ஓட அடித்ததும் ஜெயா அரசுதான், அதிமுக அரசுதான்
அதனை எல்லாம் சொல்லாமல் எதற்கெடுத்தாலும் கலைஞர் என சொல்வது ஒருவகை வியாதி,
6 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடந்தும், இந்த பஸ் ஸ்டிரைக் போராட்டத்திற்கு கலைஞர்தான் காரணம் என இன்னும் ஒருவனும் கிளம்பவில்லை, திருந்திவிட்டார்களோ என்னமோ?
திருந்தாவிட்டால் இனி பிடித்துவைத்து திருத்திவிடலாம்…