திமுக ஆட்சிக்கு வர நினைத்தால் விடமாட்டோம் : ஆர்எஸ்எஸ் … இன்னும் பிற

அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வர நினைத்தால் விடமாட்டோம் : ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள்

அட பதர்களா? இவ்வளவுதானா உங்கள் அறிவு

அதிமுக என்பது செம்மறியாட்டு கூட்டம், அதனை புலியாக உருவாக்கி ஷோ காட்டியது டெல்லி, உண்மையில் அதிமுக புலி மேக் அப் போட்ட ஆடுதான்

இப்பொழுது ஓநாய்கள் அந்த அதிமுக எனும் ஆட்டு கூட்டத்தை ரத்தம் உறிஞ்சி கூறுபோடுகின்றன‌, புலிகள் என்றால் பாயும், ஆடுகள் என்ன செய்யும்? கத்தத்தான் செய்யும் அதுவும் கழுத்தில் கடித்தால் சத்தமே வராது. அதிமுக மவுனமான காட்சி இதுதான்..

ஆனால் திமுக என்பது மதயானை கூட்டம், மோதிபார்த்தால் ஓநாய்களுக்கு குறுக்கெலும்பு இருக்காது, அந்த யானையினை முன்பு ஏதோ எம்ஜிஆர், ஜெயா எனும் அங்குசங்களை காட்டி சில நேரம் அடக்கியிருக்கலாம்

இனி அங்குசங்கள் இல்லாததால் இந்த கும்பல் தடுமாறுகின்றது, இனி எப்படி அடக்க என யோசிக்கின்றது, அப்படியான புலம்பல்தான் இம்மாதிரியான அறிக்கைகள்

இனி திமுகவினை எப்படி அடக்க என வழிதெரியாமல் விதிபிதுங்கி நிற்கும் நிலையில் இப்படியான வார்த்தைகள் சகஜமே..

ஆனானபட்ட இந்திரா, காமராஜர், எம்ஜிஆர் காலங்களையே கடந்து வந்த யானைக்கு, எத்தனையோ பேர் அடக்க முயன்றும் தூக்கி எறிந்து திமிறி நிற்கும் காளைக்கு சிறு பூனைகள் எதிரியா?

தமிழகத்தில் ஒரு தொகுதி, ஏன் ஒரு வார்டு கவுன்சிலர் பதவி கூட இல்லாத இவர்களா திமுகவிற்கு சவால்?

அதிமுக அடிமைகளை அலறவைத்துவிட்டு திமுகவும் இப்படித்தான் என தப்புகணக்கு போட்டு கொண்டிருக்கின்றார்கள்..

70 ஆண்டுகாலமாக பாசறை அமைத்து படிக்க வைத்து, வாசிக்க வைத்து, சிந்திக்க வைத்து உருவாக்கி வைத்திருக்கும் திமுக படையினை இந்த ஆர்.எஸ் எஸ் கோஷாக்கள் அசைத்துவிடுமா?

திமுகவினை எதிர்க்க ஒரு தகுதி வேண்டும், அது இல்லாவிட்டால் இல்லை என சொல்லிவிட்டு பன்னீரையோ, பழனிச்சாமியினையோ குளிப்பாட்ட செல்லலாம்

வீணாக இப்படி பேசிகொண்டிருந்தால் சிரிப்புதான் வரும்..

முடிந்தால் அதிமுக ஆட்சியினை கலைத்து தேர்தல் வையுங்கள் பார்க்கலாம், தைரியம் இருக்கின்றதா?

குறுக்கெலும்பு இல்லாத ஓநாய்கள் எல்லாம் யானைக்கு சவால் விடுகின்றதாம்...


ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை: பாஜகவுக்கு தொடர்பில்லை, பொன்னார் மற்றும் வெங்கையா நாயுடு

அதிமுக சிக்கலுக்கும் பாஜகவிற்கும் தொடர்பில்லை, தமிழ்நாட்டு ரெய்டுக்கும் பாஜகவிற்கும் தொடர்பில்லை என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், பஜகவிற்கும் எதற்குமே சம்பந்தம் இல்லையாம்…

பழக்கதோஷத்தில் விரைவில் மோடிக்கும் பாஜவிற்கும் சம்பந்தம் இல்லை என விரைவில் சொன்னாலும் சொல்வார்கள்..


சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை

சுகாதர துறை அமைச்சர் வீட்டை கழுவி துடைத்து சுத்தம் செய்கின்றார்கள் போல., அமைச்சர் வீடு அவ்வளவு அழுக்கடைந்து நோய்களை பரப்பிகொண்டிந்திருக்கலாம்


 பிரபல சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவணத்தில் சோதனை, வரி ஏய்ப்பு செய்ததாக புகார்

சமையல் எண்ணெயினை விட பல ஆயிரம் மடங்கு பணம் புழங்குவது கச்சா எண்ணெய் ஆலைகளில்தான்

அந்த அம்பானியின் ஆலைகளில் யாரும் நுழைவார்கள், இந்த வருமானவரி அலுவலக குமாஸ்தோ கூட நுழையமாட்டான் அல்லது நுழைய விடமாட்டார்கள்..


பிளஸ் 1 அரசுத் தேர்வு நடத்தப்படும். 3 ஆண்டுகளில் படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

இந்த அரசே இன்னும் 1 மாதமோ 4 மாதமோ என அல்லாடிகொண்டிருக்கின்றது, இதில் இவர் 3 வருடங்கள் இருந்து பாடதிட்டத்தை மாற்றுவாராம்

மூழ்கிகொண்டிருக்கும் கப்பலில் இருந்துகொண்டும் கனவா?