வருடா வருடம் மே 17ல்…..
வருடா வருடம் மே 17ல் கொடி பிடித்தல், ஒப்பாரி இடுதல், கலைஞரை மண் வாரி தூற்றுதல், காங்கிரசை மிரட்டுதல் , கடற்கரைக்கு வெளிச்சம் கொடுத்தல் என ஏக அழிச்சாட்டியங்களை செய்யும் பல கும்பல்களை இம்முறை காணவில்லை
மே 17 தமிழினபடுகொலை அதற்கு ஒரே காரணம் கலைஞர் என்றேதான் கத்துவார்கள், அவர்கள் ஏன் செத்தார்கள்? எவன் பிடித்துவைத்திருந்தான் என்பதல்ல பிரச்சினை
கலைஞர் ஏன் அன்று சாகவில்லை என்பதுதான் இவர்கள் பிரச்சினை
இந்த சீரியஸ் பைத்தியங்களுக்கு என்ன ஆனது என தெரியவில்லை, சர்வ நிச்சயமாக அவர்கள் திருந்தும் கும்பல் இல்லை,
நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக ஈழபிரச்சினையினை தீர்த்து, தனிநாடு வாங்கி ராஜபக்சேயினை கொன்றுவிட்டார் என்பதற்காக அமைதியாகியிருக்க மாட்டார்கள்…
மாறாக சயனைடை ஏதும் கடித்துவிட்டார்களோ என்னமோ?
இவர்கள் உணர்வெல்லாம் எங்கிருக்கின்றது என மோடி அரசுக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது
வெளிநாட்டு பணங்களை மோடி அரசு கண்காணிக்க தொடங்கியதில் இருந்தே இவர்கள் சுதி குறைய தொடங்கி இப்பொழுது நின்றும் விட்டது ஏன்? என்ற சந்தேகம் நமக்கெல்லாம் வராதவரை நல்லது..