சீனா, ஐரோப்பாவை இணைக்கும் பட்டு சாலை


அக்காலமுதலே தன்னை உலகோடு தன்னை சாலை மூலம் இணைத்து கொள்ள துடித்த நாடு சீனா, பட்டும் தேயிலையிலும் ஐரோப்பா கொண்டு செல்ல பட்டு சாலையே அமைத்திருந்தது
அந்த சாலையின் சில பிரிவுகள் மூலம் அன்றே உலகெல்லாம் தொடர்புகொண்டிருந்தது சீனா, பின் உலகாண்ட மங்கோலியர்கள் அதனை செம்மைபடுத்தி டோல்கேட் எல்லாம் அமைத்து வசூலித்தார்கள்
மங்கோலியர் காலத்திற்கு பின் அடங்கி கிடந்த சைனா, மாவோ காலத்தில் விழித்துகொண்டு இப்பொழுது பழம் பெருமையினை மீட்க வல்லரசு கனவில் அலைகின்றது
உலகெல்லாம் சாலை, ரயில், துறைமுகம் என எல்லாமும் தங்கள் நாட்டோடு இணைக்கபடவேண்டுமென்று மிக பெரும் திட்டத்தில் இறங்கியிருக்கின்றது
கப்பல் வழியாக செல்லும் அடுத்த நாட்டு துறைமுகங்களுக்கு, தரை வழியாகவும் சாலையும், தண்டவாளமும் அமைக்க தீவிரமாகின்றது
ரஷ்யா வழியாக லண்டனுக்கு ஏற்கனவே 14 ஆயிரம் கிமீ தூர ரயில் பாதையினை பல நாடுகள் வழியே கட்டியாயிற்று, இப்பொழுது சாலையும் போடவேண்டுமாம்
கிழக்காசியாவில் கூடுமானவரை அவர்களின் கூட்டாளி நாடுகளுடன் சாலை, ரயில் என எல்லாவற்றையும் துறைமுகம் வரை இணைக்க கிளம்பிவிட்டது
நேபாளம், பாகிஸ்தான் வழியாக பாகிஸ்தானின் குவெட்டா துறைமுகதையும் தரை மார்க்கமாக இணைக்க கிளம்பி விட்டது, இன்றைய தேதியில் பாகிஸ்தானில் பாதி சீனாவிற்கு எனும் நிலை
ஏற்கனவே முத்துமாலை திட்டம் என துறைமுகங்களை எல்லாம் இணைத்து சங்கிலி தொடர் அமைத்த சீனா, இப்பொழுது தரைமார்க்கமாகவும் அந்த துறைமுகங்களை கட்டுபடுத்துகின்றது
இந்த இணைப்பில் சில ஆப்ரிக்க நாடுகளும் உண்டு
ஏன் இவ்வளவு ஆர்வம்? இரண்டுவிஷயம் பிரதானம்
முதலாவது வியாபாரம் நொடிபொழுதில் பொருள்களை வாங்க விற்க செய்யலாம், எந்த துறைமுகத்திலும் விற்கலாம், எந்த துறைமுகத்திலிருந்தும் சீனாவிற்கு ஏற்றிவிடலாம்
கண்டெயினர், லாரி, கப்பல் என எல்லா வகையிலும் சரக்கு செல்லும்
இரண்டாவது லாபம் ராணுவ அணுகூலம், படை அனுப்பவோ அல்லது மிரட்டவோ பெரும் வேகத்தோடு செல்லலாம்
பாகிஸ்தானோடு சேர்த்து கிட்டதட்ட 60 நாடுகளை இந்த திட்டத்தில் சேர்த்திருக்கின்றது, ஒரு வகையில் உலகை மிரட்டுகின்றது சீனா
ஒன் பெல்ட் ஒன் ரோடு எனும் அந்த திட்டம் பெரும் தொலைநோக்கோடு செய்யபட்டிருக்கின்றது,
ஆசியாவில் நாங்கள்தான் தாதா என்பதை இந்த ஆக்டோபஸ் கரங்கள் போன்ற அமைப்பில் பல பிடிகளை ஏற்படுத்தி உலகிற்கு சொல்ல முனைகின்றது சீனா
இந்த புதிய பட்டு சாலைதான் இன்றைய உலகில் பெரும் கவனம் பெற்றுவருகின்றது
படம் இன்னும் நன்றாக அந்த திட்டத்த்தினை விளக்கும், இதில் இலங்கை மிக முக்கிய இடத்தில் வருகின்றதல்லவா?, சிங்கள பலம் அதுதான்.
(இதில்தான் இந்தியா சிந்திக்கின்றது இணையம் எனும் துறைமுகத்தை எழுப்பிவிட்டால் கொழும்பு எனும் கண்ணியினை இந்த சங்கிலியிலிருந்து தூக்கிவிடலாம் )
அது இருக்கட்டும்
இப்படி சீனா உலகை எப்படி வளைக்கலாம் என சிந்தித்துகொண்டிருக்க , பாஜகவின் மத்திய அரசோ தமிழகத்தை எப்படி வளைக்கலாம் என மகா தீவிர திட்டம் தீட்டிகொண்டிருக்கின்றது
அதன் பெரிய கவலை இப்பொழுது அதுதான். அது ஒன்றுதான்