ஜெயலலிதான்னா சாயிஸ்தங்கே வேறே யார்னுனு சாயிஸ்சல்லா

சிறையில் இருக்கும் இளவரசி நோயுற்றதை அடுத்து அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற சொல்லியிருக்கின்றார் சசிகலா, ஆனால் சிறை நிர்வாகம் அங்குள்ள மருத்துவமனை சிகிச்சையே செய்திருக்கின்றது

மீறி வற்புறுத்தியிருக்கின்றார் சசிகலா, அதற்கு ஒரு அதிகாரியிடம் இருந்து பதில் இப்படி வந்ததாம்

“ஜெயலலிதான்னா சாயிஸ்தங்கே வேறே யார்னுனு சாயிஸ்சல்லா” என கன்னடத்தில் வந்ததாம்,

தமிழ்படுத்தினால் என்ன வரும்? இந்த மாதிரி வரும் என செய்திகள் சொல்கின்றன..

“ஜெயலலிதாவை கொன்றது மாதிரி யாரையும் நாங்க சாகடிக்க மாட்டோம்…”

அதற்கு மேலும் சசிகலா ஏதும் சொல்லியிருப்பார்?


கொசுறு

எடப்பாடி பழனிச்சாமி அரசு சார்பில் தேர்தலில் யார் நின்றாலும் டெபாசிட் இழப்பார்கள்: ஓபிஎஸ்

அவர்கள் மட்டுமா இழப்பார்கள்? அதிமுக என சொல்லி யார் நின்றாலும் அதுதான் கதி, இவருக்கும் சேர்த்துதான்…