ரஜினி கன்னடர், அவர் எங்கள் தமிழ் மண்ணை ஆளகூடாது : சீமான்
ரஜினி கன்னடர், அவர் எங்கள் தமிழ் மண்ணை ஆளகூடாது : சீமான்
பன்னீர் எனும் பச்சை தமிழனை ஆளவிட்டுவிடலாமா? ஏன் இப்பொழுதும் பழனிச்சாமி எனும் தமிழன் தானே ஆள்கின்றார், அதனால் இவர் கட்சியினை கலைத்துவிட்டால்தான் என்ன?
தீபா வரும்பொழுது சீமானிடம் அவர் கன்னடர் எனும் சத்தமே இல்லை, ஆனால் ரஜினியினை கண்டால் மட்டும் சத்தம் வருகின்றது
சீமான் சொல்லவருவதெல்லாம் இதுதான், பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியில் தமிழகம் சீரும் சிறப்புமாக இருக்கின்றது, அவருக்கு எதிர்கட்சியாக தமிழன் பன்னீருக்குத்தான் தகுதி உண்டு
பழனிச்சாமியின் பொற்கால ஆட்சியினை கலைக்கவே கன்னடன் ரஜினி அரசியலுக்கு வருகின்றார், இதுதான் அங்கிள் சைமன் சொல்ல வரும் விஷயம்..
பாஜக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்: ரஜினிக்கு அமித்ஷா அழைப்பு
அதுதான் 10 வருடமாக அவருக்காக திறந்தே வைத்திருக்கின்றீர்களே, இனி புதிதாக கதவினை திறக்க என்ன இருக்கின்றது?
எப்பொழுதும் போல பாஜக கதவுகள் ரஜினிக்காக திறந்தே இருக்கின்றது என சொன்னால் நல்லது..
காஷ்மீர் பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு: ராஜ்நாத் சிங்
அப்படியா? பாஜக அரசு ராஜினாமா செய்யபோகின்றதா?