தீ பிடித்த கட்டிடம் இடிக்கப்படும்: அமைச்சர் உதயகுமார்

தீ பிடித்த கட்டிடம் அரசு சார்பில் இடிக்கப்படும்: அமைச்சர் உதயகுமார்

ஆமாம், கட்டும்பொழுது கண்டுகொள்ள கூடாது, விதிமுறை மீறியிருக்கின்றதா இல்லையா என்பதெல்லாம் ஆராய கூடாது, பாதுகாப்பு எப்படி இருக்கின்றது என்பதில் எல்லாம் அக்கறை காட்ட கூடாது

முன் எச்சரிக்கை என எதுவுமே இருக்கின்றதா என பார்க்க கூடாது, அம்மா சமாதி, சின்னம்மா நாற்காலி, மோடி கால் என அலையவேண்டும்

ஆனால் எரிந்து முடித்துவிட்டால் அள்ளிபோட அரசு வரும்

வெட்கமாக இல்லை?

ஏதோ பெரும் கடமையினை அரசு ஆற்றபோவது போல அறிக்கை விட்டுகொண்டிருக்கின்றார்.

எல்லாவற்றிலும் அடக்க காரியம் செய்வதுதான் இந்த அரசு, அப்படி இந்த எரிந்த‌ கட்டடத்தையும் அள்ளி சென்று முடிக்க போகின்றார்கள்,

இந்த வெட்டியான் வேலைக்கு பெருமை வேறு…


பிரம்மச்சாரி தேசிய அடையாளம் என்றால் ஹனுமானை பெருங்கடவுள் ஆக்கிவிடலாம், தேசிய விலங்காக வானர கூட்டத்தை அறிவித்துவிடலாம்

சீதையிடம் மயங்கிய ராமருக்கு ஏன் சர்ச்சை?