கலைஞர் டிவியில் இன்று உருப்படியான காரியத்தை செய்கின்றது
கலைஞர் டிவியில் இன்று உருப்படியான காரியத்தை செய்கின்றது, இனி செய்யுமா என தெரியாது
94 வருட கலைஞரின் வாழ்க்கையினை சொல்கின்றது, பல விஷயங்களை சொல்கின்றார்கள், கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது
ஆனால் அவரின் போராட்ட வாழ்வு பற்றி ஒன்றும் பெரிதாக இல்லை, மாறாக அவரின் கலைவாழ்வு, அரசியல் என மேம்போக்காக சொல்கின்றார்கள்
இன்னும் அழுத்தம் வேண்டும், அப்படி சொல்ல அது முரசொலியா? அதனால் எதிர்பார்க்க கூடாது
அண்ணா, பெரியார் முதல் எல்லோரும் கலைஞர் பற்றி என்ன சொன்னார்கள் என பக்கம் பக்கமாக வாசிக்கின்றார்கள், பெரும் தலைவர்கள் எல்லாம் கலைஞரை பற்றி சொன்னதை சொல்கின்றார்கள்
ஆனால் ஒருவரை புறக்கணித்து பெரும் தவறு செய்கின்றார்கள்
குஷ்பூ திமுகவில் இருந்த காலம் பற்றி சொல்லவே இல்லை
கலைஞருக்கு நன்றாய் தெரியும், திமுகவிற்கு தாய்குல வாக்குவங்கி குறைவு. அது ராமசந்திரனுக்கு அதிகம், திமுகவிற்கு வரும் கொஞ்ச தாய்குலமும் வெற்றிகொண்டானின் பேச்சுகளை கேட்டால் ஒரே ஓட்டம்
இந்நிலையில்தான் நல்ல மகளிரணியினை கலைஞர் உருவாக்கினார், சல்மா தமிழச்சி தங்கபாண்டியன் என அருமையான அணி உருவானது, தங்க கீரிடம் என்றாலும் வைரம் பதித்தால் அல்லவா பார்வை கிடைக்கும்?
அப்படி உணர்ந்து கொண்டுவரபட்டவர்தான் குஷ்பூ, அவர் அக்கட்சியில்தான் இருந்திருக்க வேண்டும்
ஆனால் என்னவெல்லாமோ நடந்தது, கலைஞரின் கட்டுபாட்டுக்கு அப்பாற்பட்டு நடந்தது, குஷ்பூ மிரட்டபட்டார், ஆனால் அஞ்சவில்லை
பின் தன்னால் பிரச்சினை எல்லை மீறி செல்வதை கண்டு அவரே ஒதுங்கினார், அவர் நினைத்திருந்தால் திமுகவினை உடைத்து தனிகட்சி தொடங்கியிருக்கலாம் ஆனால் செய்யவில்லை, அதுதான் நாகரீகம், பெருந்தன்மை
அத்தோடு இல்லை, அதற்கு அடுத்தகட்டத்தில்தான் குஷ்பூ உயர்ந்து நின்றார்
இன்றுவரை திமுகவில் இருந்து தான் ஒதுக்கபட்ட காரணத்தை அவர் சொல்லவுமில்லை, கலைஞரை பற்றி ஒரு வார்த்தையும் புகார் சொல்லவுமில்லை
எத்தனை பேர் குஷ்பூவினை வாய்ப்பாக வைத்து கலைஞரை சாட பார்த்தார்கள்? பளிசிட்டி கிடைக்கும் என எத்தனை பத்திரிகைகள் குஷ்பூவினை உசுப்பி பார்த்தன
மிகுந்த நிதானமாய், அக்காரணத்தை சொல்லபோவதில்லை, கலைஞர் என்றுமே மரியாதைகுரியவர் என அவர் சொன்னபொழுது குஷ்பூ எல்லோர் மனதிலும் உயர்ந்து நின்றார்
கட்சிக்கு அப்பாற்பட்டு, குஷ்பூவின் ஒரு பேட்டியினை அந்த கலைஞர் டிவி இன்று ஏற்பாடு செய்திருக்க வேண்டும், அது செய்யாததால்..
நம் சங்கமும், மன்றமும், அதி தீவிர ரசிகர்கள் அடங்கிய கமிட்டியும், பொதுகுழுவும், செயற்குழுவும் கலைஞர் டிவியினை வன்மையாக கண்டிக்கின்றது..