நான்கு முக புத்தனுக்கு விழாவாம்…

Image may contain: 1 person

நமது ஊரில் முச்சந்தியில் பிள்ளையார் இருப்பது போல, இங்கு ஆங்காங்கு நாற்சந்திகள் நடுவே புத்தர் இருப்பார், அல்லது புத்தர் போல யாராவது இருப்பார்கள்

உணவு உபசரிப்பில் மலேசியா நல்ல நாடு, விழாகாலங்களில் எங்காவது நாலு பேர் கூடி நின்று சாப்பிட்டு செல்லுங்கள் என அழைத்துகொண்டே இருப்பார்கள், சாப்பாடு எப்படி இருக்கும் என சொல்லமுடியாது, ஆனால் அந்த அன்பும், புன்னகை ஒழுகும் அந்த‌ அழைப்பும் பாரட்டபடவேண்டியது

இன்றும் அழைத்தார்கள், 4 முக புத்தனுக்கு விழாவாம். அந்த சிலைக்கு மாலையிட்டு வணங்கிகொண்டிருந்தார்கள்

அவர் உண்மையில் 4 முக புத்தன் அல்ல, மாறாக பிரம்மன். அவர் கை வைத்திருக்கும் வடிவும், அதிலிருக்கும் பொருளும் அவர் பிரம்மனே என்பதை தெரிவிக்கின்றன‌

கிழக்காசியாவில் ஒரு காலத்தில் பரந்திருந்த இந்து மற்றும் புத்த மதங்களின் கலப்பால் வந்த விஷயம் இது, இந்து கடவுளைத்தான் இப்படி புத்தர் பெயரில் பல இடங்களில் வணங்குவார்கள்

ஆனந்த சயன கோல கண்ணனை கூட, படுத்திருக்கும் புத்தர் என வணங்கும் சில ஆலயங்கள் உண்டு

இந்தியாவில் பிரம்மனுக்கு ஆலயம் மிக சில இடங்களில்தான் உண்டு, கும்பகோணத்தில் உண்டு, ராஜஸ்தானில் உண்டு அதன் பின் பெரும் ஆலயங்கள் பற்றி தகவல் இல்லை

ஆனால் தாய்லாந்தில் இப்படி ஏகபட்ட 4 முக புத்தர் ஆலயங்கள் பிரம்மனுக்கு உண்டு, கம்போடியா, லாவோஸில் உண்டு, மலேசியாவில் சில இடங்களில் உண்டு

அவருக்கு என்ன விழா என தெரியவில்லை , விசாரித்தால் ஏதோ சீன மொழியில் டிங் தாவ் வுவ் மங் கீய் சீ சோ மே என ஏதாவது சொல்வார்கள், ஆனால் பிரம்மனின் அவதார தினமாக இருக்கலாம் என்கின்றார்கள்

பொதுவாக புத்த மதம் என்றாலும் கோழி, பன்றி இல்லாமல் உணவு படைக்கா சீனர்கள், இன்று முழுக்க முழுக்க இந்த 4 முகனுக்கு சைவ உணவுதான் படைக்கின்றார்கள்

நமது பிரம்மன் எங்கெல்லாம் எப்படி எல்லாம் மாறி இருக்கின்றான், இந்தியாவில் ஒரு காலத்தில் இருந்த அந்த பிரம்மன் வழிபாடும் ஆலயமும் இன்று மறைந்துவிட்டன‌

அவற்றையெல்லாம் முறைபடுத்த இந்துக்களின் பிரதிநிதிகளுக்கு விருப்பமில்லை, அவர்களுக்கு இந்துமதம் மாட்டின் வாலில் இருக்கின்றது

வரும் வழியில் 4முகன் விழாவிற்கு அழைத்தார்கள் போக ஆசைதான், ஆனால் தமிழகம் பலமுகனான தமிழ் பிரம்மனின் விழாவினை கொண்டாடிகொண்டிருப்பதால், தொலைகாட்சியிலும் செய்தியிலும் அந்த தமிழ் பிரம்மனின் கொண்டாட்டம் இருப்பதால் ஓடி வந்துவிட்டேன்