சங்கமித்ரா படத்தில் நயன் …

Image may contain: 2 people, people smilingசங்கமித்ரா படத்தில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நயன் நடிக்க வரலாம் என பல முக்கிய பத்திரிகைகள் எழுதுகின்றன‌

அதாவது ஸ்ருதி ஹாசன் போனால் என்ன? நயன் பொருத்தமாக இருப்பார் என சமூக வலைதளத்தில் எழுதுகின்றார்களாம்

யார் எழுதினார் என்றால் Chandran Kannan, Babu Rao இந்த இருவரை தவிர யாருமில்லை

சங்கமித்ரா படத்தில் குஷ்பூ மிக பொருத்தமாக இருப்பார் என நாமெல்லாம், நமது சங்கம்,மன்றம், தற்கொலை, புரட்சி படை எல்லாம் எப்படி எல்லாம் எழுதுகின்றோம், எத்தனை கோடி ரசிகர்கள் உலகெங்கிலும் இருந்து எழுதுகின்றார்கள்..

எந்த பத்திரிகையாவது அப்படி குஷ்பூ நடிக்க வேண்டும் என செய்தி வெளியிடுகின்றதா?

இல்லை, இதுதான் இன்றைய பத்திரிகை அதர்மம்..

குஷ்பூ பற்றிய செய்தியினை சொல்லாமல், நயன் பற்றி, அதுவும் இரு LKG பாய்ஸ் எழுதிய வார்த்தைகளை எல்லாம் பெரும் செய்திகளாக வெளியிட்ட அந்த நாளேடுகளை நமது சங்கம் கண்டிக்கின்றது, புறக்கணிக்கின்றது

இம்மாதிரி பொய் செய்திகள், புரட்டுகள், கற்பனைகள் எல்லாம் எம் தலைவியின் புகழை மங்க செய்யாது

நயன் எல்லாம் அப்படத்தில் நடித்தால் திருட்டு விசிடியில் என்ன? தமிழ் ராக்கர்ஸில் பார்க்க கூட யாரும் இருக்கமாட்டார்கள் என்பது யாருக்கு தெரியாது

அதுவே குஷ்பூ நடித்தால் ஜிஎஸ்டி சிக்கலையும் கடந்து படம் பெரும் வெற்றியாகும் என்பது உலகிற்கே தெரியும்

இந்த பத்திரிகா அதர்மங்களை, வளைத்து சொல்லும் வஞ்சகங்களை, ஏடுகளில் ஏறும் புரட்டை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்

குஷ்பூ மன்றத்து ரசிக கண்மணிகள் நெஞ்சில் இடி பாய்ந்த நேரமிது.. ஆனாலும் விடமாட்டோம், மீண்டு வருவோம்