மிஸ்டர் டிரம்ப்-க்கு ஒரு யோசனை
“என்னுடைய முந்தைய வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதில் பல விஷயங்களை சாதிக்க முடிந்தது.
இப்பொழுது முந்தைய பிஸினெஸைக் காட்டிலும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி வாழ்வு கொஞ்சம் சுளுவாக இருக்கும் என்று நினைத்தேன்.
ஏதோவொரு கூண்டில், பட்டுப்பூச்சியின் கூட்டினுள் அடைபட்ட மாதிரி உணர்வு கிடைக்கிறது. வெறுப்பாயிருக்கின்றது”
இப்படி அரசியலுல் அலுத்துகொண்டவர் யார் தெரியுமா? நம்ம டிரம்ப் தான்
அன்னாருக்கு அனுபவமில்லை, ரகசிய தகவல்களை உளறி கொட்டியதில் சந்தி சிரிக்கின்றது, அவரால் ஒரு முடிவும் உருப்படியாக எடுக்கமுடியவில்லை
சத்தமில்லாமல் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றலாம், இது உள்நாட்டு முடிவு என சமாளிப்போம் என இஸ்ரேல் சொன்ன ஆலோசனையினை பொதுவில் அறிவித்து
வாங்கி கட்டி கொண்டதில் இஸ்ரேலே கடும் அப்செட்
அன்னார் இப்பொழுது உளற ஆரம்பித்துவிட்டார், இவ்வளவிற்கும் ஆட்சிக்கு வந்து 5 மாதம் தான் ஆகின்றது
மிஸ்டர் டிரம்ப் உங்களுக்கு எங்களால் ஒரு யோசனை மட்டும்தான் கொடுக்க முடியும்
அமெரிக்க மருத்துவ கலாநிதிகளை, பெரும் விற்பனர்களை சென்னை கோபாலபுரத்திற்கு அனுப்புங்கள், அவரை பேச வையுங்கள்
ஆயிரம் ஆலோசனைகளை அள்ளிதரும் அட்சயபாத்திரம் அங்கே இருக்கின்றது, அவரை பின்பற்றி நீங்கள் செயலபட்டால்
புட்டீன் ஓடியே விடுவார், வடகொரிய அதிபர் தற்கொலை செய்து கொள்வார், ஈரானிய அதிபருக்கு கிறுக்கே பிடித்துவிடும்
நீங்களும் 4 வருடம் அசையாமல் இருக்கலாம்
ஒரு பேனா முனையிலே தமிழகத்தை ஆண்டவர், அந்த அதிகாரமிக்க செங்கோல் முனை உலகத்தை ஆள வழிசொல்லாமல் இருப்பாரா?
முயற்சியுங்கள், முடியாவிட்டால் அவரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், இப்படி எல்லாம் பிதற்றாமல் உற்சாகம் ஆகிவிடுவீர்கள்