இனி வானமும் நமக்கு வசப்படும்

அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கின்றது இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது பெரும் வெற்றி

இஸ்ரோ இந்திராகாந்தி காலத்தில் தொடங்கபட்டது, பின் பிஎஸ்ல்வி எனபடும் குறைந்த சக்தி கொண்ட ராக்கெட்டுகளை உருவாக்கினொம்

பெரும் சக்திகொண்ட ஜிஎஸ்எல்வி எனப்படு ராக்கெட்டுகள் இன்றி அடுத்தகட்டத்திற்கு நகரமுடியாது என கருதபட்ட காலத்தில்தான் ராஜிவ் பிரதமரானார்

கோர்பவேவுடன் அவர் செய்த ஒப்பந்தத்தில் அதனைத்தான் கேட்டிருந்தார், சோவியத் ரஷ்யாவும் சம்மதித்திருந்தது

ரஷ்ய உடைவும், ராஜிவின் மரணமும் அந்த கனவில் மண் அள்ளி போட்டது, பின் ரஷ்யாவும் ஒதுங்கியது

இன்று நாமே உழைத்து உருவாக்கிவிட்டோம், தாமதமானாலும் வெற்றி கிடைத்திருக்கின்றது

இனி இந்தியா விண்வெளிக்கு மனிதனை சொந்தமாக அனுப்பும் காலம் தொலைவில் இல்லை, விரைவில் அனுப்புவார்கள்

ஆக விண்வெளி ஆராய்ச்சியில் பெருவெற்றி பெற்றுகொண்டே இருக்கின்றோம், முதல் 4 நாடுகள் வரிசைக்கு வந்தாயிற்று

விரைவில் இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும்பொழுது, இந்நாட்டில் இருந்து இம்சை செய்யும் சிலரையும் அனுப்பி அங்கேயே விட்டுவிட வேண்டும்

இஸ்ரோவின் இந்த சாதனை, ஒவ்வொரு இந்தியனும் பெருமைபட வேண்டிய ஒன்று

காரணம் பெரும் பின்புலமின்றி நாமே தோல்வி மேல் தோல்வி பெற்று கற்றுகொண்டு பெற்ற வெற்றி இது, வரலாற்று வெற்றி

இனி வானமும் நமக்கு வசப்படும்

வந்தே மாதரம்..