ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார் ஜெயலலிதா: சீமான் ஆவேசம்

ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார் ஜெயலலிதா: சீமான் ஆவேசம்

2016ல் ஜெயலலிதா வென்றாலும், அவர் ஆளவில்லை வெறும் 3 மாதமே முதல்வராக இருந்தார், அதற்குள் 5 லட்சம் கோடி கடன் வந்திருக்க முடியாது, இவை எல்லாம் 2011ம் ஆண்டு தொடர்ச்சிகள்

2011ல் ஜெயலலிதா முதல்வராக துடித்தது யார்? இதே அங்கிள் சைமன்.

இவர்தான் 2011ல் ஜெயலலிதாவினை ஆதரித்து தெரு தெருவாக வாக்கு கேட்டவர் என்பதும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ரைமிங்காக பேசிகொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.

“இரட்டை இலைக்கு வாக்கு கேட்கும் சீமான் பெருமையடைவானேத் தவிர ஒரு போதும் சிறுமையடைய மாட்டான் “

என்ற அன்னாரின் முழக்கம் மறக்க கூடியதா என்ன?

அதற்கு அங்கிள் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டுமா? வேண்டாமா?


கொசுறு

கூடங்குளமும், நியூட்ரினோ திட்டம் மிக‌ அவசியம் : சுற்றுசூழல் பாதுகாப்பு விழாவில் அமைச்சர் கே.சி கருப்பண்ணன்

அதாவது சுற்று சூழல் என்றால் என்னவென்றே தெரியாதவர் அந்த துறைக்கு அன்மைச்சரகியிருக்கின்றா, அதுவும் அந்த உலக சுற்று சூழல் தினம் என்றால் என்ன என தெரியாமலே அந்த விழாவில் பேசியிருக்கின்றார்

இப்படிபட்டவர்களை வைத்துகொண்டு தமிழகத்தில் என்ன செய்ய முடியும்? பரிதாபபடத்தான் முடியும்

தமிழகம் எவ்வளவு சீரழிந்துவிட்டது என்பதற்கு இவரின் பொருந்தா பேச்சு பெரும் உதாரணம்.